“இதெல்லாம் நியாயமா?” வெஸ்ட் இண்டீஸ் வீரரின் கேடி வேலை?.. கண்டறிந்த சுனில் கவாஸ்கர்.. சரமாரி கேள்வி!
கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் தவறான செயலில் ஈடுபட்டதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டறிந்து குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த பிப்.16ம் தேதியன்று நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

அசத்திய ராஸ்டன் சேஸ்
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பலரும் சொதப்பிய போதும் ஆல்ரவுண்டர் ராஸ்டர் சேஸ் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 14 ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய அணியின் 2 ஓப்பனர்களையும் வீழ்த்தினார்.

தவறான செயலா?
இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கூறிய போதும், சுனில் கவாஸ்கர் மட்டும் ஒரு விஷயத்தை கண்டறிந்துள்ளார். வீரர்கள் பொதுவாக ஃபீல்டிங்கின் போது கை விரல்களில் காயம் காரணமாக டேப் சுற்றி இருப்பார்கள். ஆனால் ராஸ்டன் சேஸ் கை முழுவதுமாக டேப் சுற்றி இருந்தது கவாஸ்கருக்கு ஆச்சரியம் கொடுத்தது.

சரமாரி கேள்வி
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், என்ன இது?, அவர் என்ன க்ளவுஸா அணிந்துள்ளார்? இது நியாயமானது தானா? இதனை யார் அனுமத்துள்ளனர்?. இது போன்ற செயல்களில் பல வீரக்ரளும் ஈடுபட்டு வருவதை நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இதற்கு தடைவிதிக்க வேண்டும்.

வீரர்களுக்கு அட்வாண்டேஜ்
இதுபோன்ற விஷயங்கள், வீரர்களுக்கு கூடுதல் அட்வாண்டேஜை கொடுக்கும். கேட்ச் பிடிக்கும் போது, அவர்கள் கைகளில் நல்ல க்ரிப் கிடைக்கும். தவறிப்போகக்கூடிய கேட்ச்கள் கூட சுலபமாக கைகளுக்குள் உட்காரும். எனவே இனிமேல் இதனை யாரும் அனுமதிக்கக்கூடாது என கவாஸ்கர் பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications