Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமேல் நான் ரன் ஓடப்போவதில்லை... ஹர்திக் பாண்டியா தடாலடி

கிங்ஸ்டன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சிறந்த 'ஃபினிஷராக' விளையாடுவேன் என்று நமபிக்கையாக தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக குறிப்பாக முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய சூப்பர் 'ஃபினிஷர்' டோணி சொதப்பல் ஆட்டம் ஆடினார். இதனால் அவர் ஓய்வு பெரும் நிலைக்கு வந்துவிட்டார் என்றும், அவரால்தான் இந்தியா பரிதாபமாக தோற்றது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

India Vs West Indies: Hardik Pandya promises 'fearless' cricket in fifth ODI, wants to be a finisher

இந்த நிலையில் இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் இறங்கும் பேட்ஸ் மேன்களில் சிறந்த 'ஃபினிஷர்' தேவை எழுந்துள்ளது. அதனை அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா நிறைவு செய்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா அளித்துள்ள பேட்டியில், " டோணியோடு விளையாடியது நல்ல அனுபவம். இதுவரையில் கடைசி நிமிடங்களில் ஓடி ஓடி ரன் எடுப்பது என்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளேன். ஏன் எனில் அவ்வாறு ஓடி ஓடி ரன்கள் எடுப்பது அணியின் வெற்றிக்கு உதவாது என்பதை உணர்ந்துள்ளேன். பேட்டிங்கில் இறங்கியது முதலே ரன்களைக் குவிக்க வேண்டும் என்று தெரிகிறது. அப்போதுதான் சேசிங் ஆட்டங்களில் வெல்லமுடியும்.

நாங்கள் இறுதி ஆட்டத்தில் பயமில்லாமல் விளையாடவுள்ளோம். கடைசியாக விளையாடிய போட்டியானது சாதகமாக அமையவில்லை. அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு இனிவரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி எங்களை மீண்டும் நிரூபிப்போம்" என்று தெரிவித்தார்.

Story first published: Wednesday, July 5, 2017, 17:23 [IST]
Other articles published on Jul 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+