கொல்கத்தா: 168 ரன்களில் மே.இ.தீவுகள் ஆல் அவுட்! இன்னிங்ஸ், 51 ரன்களில் இந்தியா அபார வெற்றி!!
கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தது.
நேற்று 2-ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணி தடுமாறியது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 10 ரன்களிலேயே அவுட் ஆனது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

சரிவில் இருந்து மீட்ட ரோஹித்- டோணி ஜோடி
ஆனால் ரோஹித் சர்மா, கேப்டன் டோணி ஜோடி நிலைத்து நின்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.

அறிமுகப் போட்டியில் ரோஹித் சதம்
பின்னர் ரோஹித் சர்மா- அஸ்வின் ஜோடி அபாரமாக விளையாடியது. டெஸ்ட் அறிமுகப் போட்டியிலேயே தமது முதல் சதமடித்தார் ரோஹித் சர்மா.

354/ 6
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ரோஹித் சர்மா 127 ரன்களுடனும் அஸ்வின் 92 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களை எடுத்திருந்தது.

அஸ்வின் சதம்- இரட்டை சதம் நோக்கி ரோஹித்
இன்று 3வது நாளில் தங்களது அபார ஆட்டத்தை ரோஹித் சர்மாவும் அஸ்வினும் வெளிப்படுத்தினர். இன்று அஸ்வின் சதத்தைக் கடந்தார். ரோஹித் சர்மா இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.

ரோஹித் 177- அஸ்வின் 124
ரோஹித் சர்மா 177 ரன்களுடனும் அஸ்வின் 124 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

280 ரன்கள் குவித்த ரோஹித்- அஸ்வின் ஜோடி
ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஜோடி மட்டும் 280 ரன்களைக் குவித்தது.

453 ரன்கள் குவிப்பு
இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக இந்தியா 453 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

219 ரன்கள் முன்னிலை
இந்தியா மேற்கிந்திய தீவுகளைவிட 219 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் இருந்தது.

6 விக்கெட் எடுத்த ஷில்லிங்போர்டு
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷில்லிங்போர்டு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தாக்கு பிடிக்க முடியாத மே.இ. தீவுகள்
இதனை தொடந்து ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறினர்.

168 ரன்களில் ஆல் அவுட்
மேற்கிந்திய தீவுகள் அணி 168 ரன்களுககுள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ப்ராவே 37 ரன்களும், பவுல் 36 ரன்களும் எடுத்தனர்.

இன்னிங்ஸ் வெற்றி
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

9 விக்கெட் ஷமி
இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் முகமது ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

சச்சினின் 199வது டெஸ்ட்
சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட்டில் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் விளையாடிய 199வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இதனால் கொல்கத்தா ரசிகர்கள் சச்சினுக்கு பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications