Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்.. ஒரு பக்கம் பந்த்திற்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் ராகுலுக்கு லக்!

Recommended Video

இந்தியா - மே.இ.தீவுகள் டி20... ரிஷப் பண்டுக்கு காத்திருக்கும் சவால்

ஐதராபாத் : இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதவுள்ள முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்தப் போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.

காயம் காரணமாக ஷிகர் தவான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதையடுத்து கே.எல். ராகுல் துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆடவுள்ளார்.

இதேபோல கடந்த சில போட்டிகளில் தன்னுடைய திறமையை நிரூபிக்க தவறியுள்ள ரிஷப் பந்த், இந்த தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அளிப்பதன்மூலம் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரியவரும்.

ஆண்டின் இறுதி தொடர்

ஆண்டின் இறுதி தொடர்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ள டி20 போட்டிகள், ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இன்று துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளன. டி20 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று துவங்கவுள்ளது. இது இந்த ஆண்டில் இந்தியா பங்கேற்கும் இறுதி தொடர் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.

துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல்

துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல்

காயம் காரணமாக ஷிகர் தவான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவருக்கு பதிலாக கே.எல். ராகுல், ரோஹித் சர்மாவுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த ராகுல்

இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்த ராகுல்

கடந்த வங்கதேசத்திற்கு எதிரான சர்வதேச டி20 போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் கே.எல். ராகுல் அனைவரது கவனத்தையும் பெற்றார். ஐபிஎல் போட்டிகளில் இவர் துவக்க ஆட்டக்காரராக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் இடம்பெறுவாரா?

ரிஷப் பந்த் இடம்பெறுவாரா?

கடந்த சில போட்டிகளில் தன்னுடைய திறமையை நிரூபிக்க தவறிய ரிஷப் பந்திற்கு இந்த போட்டியில் ஆடுவதன் மூலம் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது தெரியவரும்.

கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர்

கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர்

ஷிகர் தவானுக்கு பதிலாக இந்த தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். கேரளாவை சேர்ந்த ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் வரவால், கடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் மோசமாக விளையாடிய ரிஷப் பந்த்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சஞ்சு, தோனிக்கு வாய்ப்பளிக்கப்படுமா?

சஞ்சு, தோனிக்கு வாய்ப்பளிக்கப்படுமா?

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து இந்திய அணி சார்பில் அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்க முடியும். ஆனால், சஞ்சு சாம்சன் மற்றும் தற்போது விளையாட்டில் இருந்து ஒதுங்கியுள்ள தோனியில் இடங்கள் கேள்விக்குறியாகும்.

மீண்டும் இணைந்துள்ள பௌலர்கள்

மீண்டும் இணைந்துள்ள பௌலர்கள்

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார். இதேபோல நியூசிலாந்து தொடரிலிருந்து வாய்ப்புக்காக காத்திருந்த குல்தீப் யாதவும் தற்போது அணியில் இடம்பெற்றுள்ளார்.

வெற்றி வசப்படுமா?

வெற்றி வசப்படுமா?

இந்தியாவிற்கு எதிராக களமிறங்கிய கடந்த தொடரில் 3க்கு 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி படுதோல்வி அடைந்த நிலையில், ஆண்டின் இறுதியில் விளையாடப்படும் இந்த தொடரில் வெற்றிபெறும் நெருக்கடியில் அந்த அணி உள்ளது. மொத்தத்தில் இந்த தொடர் ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை பரிசளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Story first published: Friday, December 6, 2019, 11:56 [IST]
Other articles published on Dec 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+