Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோப்பையை வென்றது இந்தியா.. மழையால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிரா !

போர்ட் ஆப் ஸ்பெயின்: மழை காரணமாக இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனதால் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

India vs West Indies: Play was abandoned 3rd consecutive day

இரு அணிகள் மோதிய 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் 22 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது.

இதனிடையே தொடர் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. களத்தில் பிராத்வெயிட் 32 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 2-ம் நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. தொடக்கம் முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 4-வது நாளும் மழை காரணமாக நாள் முழுவதும் ஆட்டம் கைவிடப்பட்டதால், போட்டியை கைவிடுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இதனால் டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது. தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் 22 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது.

இதனிடையே தொடர் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. களத்தில் பிராத்வெயிட் 32 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 2-ம் நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. தொடக்கம் முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 4-வது நாளும் மழை காரணமாக நாள் முழுவதும் ஆட்டம் கைவிடப்பட்டதால், போட்டி டிராவில் முடிவடைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Story first published: Tuesday, August 23, 2016, 0:15 [IST]
Other articles published on Aug 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+