Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் இணையும் முன்னணி ஜோடி.. மிக நீண்ட பேட்டிங் வரிசை.. முதல் டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று மாலை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டர்ன்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்திய அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாற்றங்களுடன் களம் காணவுள்ளது.

ஓப்பனிங் யார்

ஓப்பனிங் யார்

கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பு பிரச்சினை காரணமாக டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். எனவே ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷான் ஓப்பனிங் களமிறங்கி விளையாடவுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் இல்லாத போதும் இஷான் கிஷான் தான் விளையாடி 36 பந்துகளில் 28 ரன்களை குவித்தார். மற்றொரு புறம் ருதுராஜ் கெயிக்வாட் வாய்ப்புக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

இஷானுக்கு அடுத்தபடியாக விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குகின்றனர். இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் என இருவருக்குமே இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. பவுலிங்கில் சிறந்த ஆர்டர் இருப்பதால் ரோகித் துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

குல்சா ஜோடி

குல்சா ஜோடி

சுழற்பந்துவீச்சில் நீண்ட நாட்களுக்கு பிறகு குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குள் திரும்புகிறார். மேலும் யுவேந்திர சஹால் மற்றும் குல்தீப் ஆகியோர் ஜோடி சேர்ந்து பவுலிங் செய்யவுள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இந்த போட்டிகள் நடைபெறுவதால் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாக்கூர் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் என அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணிக்கு ஆழமான பேட்டிங் வரிசை கிடைக்கும். இவர்களை தவிர்த்து முகமது சிராஜ் முழு நேர பவுலராக தயாராக உள்ளார்.

Recommended Video

India vs WI 1st T20I: Predictable Playing 11, TV Info | OneIndia Tamil
ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ்

Story first published: Wednesday, February 16, 2022, 11:24 [IST]
Other articles published on Feb 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+