Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓப்பனிங் வீரராக ரிஷப் பண்ட்.. 2வது ODI ல் திடீர் ட்விஸ்ட்.. எச்சரிக்கை மணியடித்த ரோகித் - காரணம் இதோ

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் திடீரென ஓப்பனிங் களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அகமதாபாத் மோதிரா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

ஓப்பனிங்கில் ரிஷப் பண்ட்

ஓப்பனிங்கில் ரிஷப் பண்ட்

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கிற்கு, களமிறங்கிய போது தான் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. வழக்கமாக ஓப்பனிங் களமிறங்கும் கே.எல்.ராகுலுக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓப்பனிங் களமிறங்கினார். ராகுல் மிடில் ஆர்டருக்கு சென்றுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் ரிஷப் பண்ட்-க்கு இருக்கும் வாழ்வா? சாவா? கட்டம் தான். கடந்த சில போட்டிகளாக பண்ட் -ன் பேட்டிங் மோசமாக உள்ளது. பலரும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி வருகின்றனர். அவருக்கு மாற்றாக கே.எல்.ராகுலை மிடில் ஆர்டரில் களமிறக்கவும், விக்கெட் கீப்பராக வாய்ப்பு கொடுக்கவும் முன்னாள் வீரர்கள் பரிந்துரை செய்தனர். ஏனென்றால் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்.

கீப்பர் பதவி

கீப்பர் பதவி

அதன்படி ரிஷப் பண்ட்-க்கு எச்சரிக்கை கொடுப்பதற்காக, கே.எல்.ராகுலை மிடில் ஆர்டருக்கு நகர்த்தியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென விக்கெட் கீப்பிங் பணி செய்ய முடியாது என்பதால், அந்த பணியை மட்டும் இன்னும் பண்ட்டிடமே விட்டு வைத்துள்ளார். இப்போட்டியில் பண்ட் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அடுத்த போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவெடுப்பது உறுதியாகிவிடும்.

Recommended Video

IND vs WI: I'm Ready To Bat Wherever Team Requires, Been Bowling in Nets As Well- S.Yadav
கோபத்தில் சீனியர்

கோபத்தில் சீனியர்

இது ஒருபுறம் இருக்க சீனியர் வீரர் ஷிகர் தவான் அதிருப்தியில் உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், ஓப்பனிங் வாய்ப்பை தனக்கு கொடுக்காமல், பண்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை வைத்து பரிசோதித்து பார்ப்பது நியாயமே கிடையாது என கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

Story first published: Wednesday, February 9, 2022, 14:56 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+