
மீண்டும் வரும் தவான்
அந்தவகையில் பல மாற்றங்கள் கொண்ட அணியுடன் வெற்றியை பெற ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். அதாவது அணியில் மீதமுள்ள வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு தரப்படவிருக்கிறது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ஷிகர் தவான் மீண்டும் களமிறங்க காத்துள்ளார். எனவே ரோகித்துடன் அவர் ஓப்பனிங் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடலாம்.

மிடில் ஆர்டர் மாற்றம்
மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் விராட் கோலியின் 71வது சதத்திற்கான காத்திருப்பும் நீண்டு வருகிறது. சூர்யகுமார் யாதவ் தனக்கு வழங்கிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதால், ஸ்ரேயாஸ் ஐயரின் காத்திருப்பு தொடர்கிறது. இவர்களுக்கு உறுதுணையாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல், ஆகியோர் களமிறங்குவார்கள்.

தமிழக வீரருக்கு ஏமாற்றம்
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் தீபக் ஹூடா தனது திறமையை காட்டியுள்ள போதும், தவானின் வருகையால் அவர் வெளியேற்றப்படலாம். வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வதால், அவரை ஃபினிஷரின் இடத்தில் வைத்து ஆட்டத்தை முடிக்கவுள்ளனர். தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் ஏமாற்றத்தில் உள்ளதாக தெரிகிறது.

மீண்டும் குல்தீப்
ஸ்பின்னர்களில் யுவேந்திர சாஹலுக்கு 3வது போட்டியில் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அவருக்கு மாற்றாக குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர ரோகித் சர்மா பரிந்துரைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு குல்தீப் அணிக்குள் வருவதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

அறிமுகமாகும் இளம் வீரர்
வேகப்பந்துவீச்சில் மத்திய பிரதேச வீரர் ஆவேஷ் கான் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு உறுதுணையாக ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் செயல்படவுள்ளனர்.


Click it and Unblock the Notifications