Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 50 ரன்கள் தான்.. சச்சினின் மெகா சாதனையை முறியடிக்கப்போகும் ரோகித்.. அதுவும் ஸ்பெஷல் தினத்தில்

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சச்சின் டெண்டுல்கரின் முக்கிய சாதனையை கேப்டன் ரோகித் சர்மா தகர்க்கவுள்ளார்.

Recommended Video

IND vs WI 1st ODI | Sachin Record ஐ முறியடிக்கப்போகும் Rohit Sharma | Oneindia Tamil

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை மதியம் 2 மணி அளவில் இந்த போட்டியானது தொடங்கவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து காயத்தால் வெளியேறியிருந்த கேப்டன் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முழு உடற்தகுதியுடன் கம்பேக் கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அவரின் கேப்டன்சிக்கு கீழ் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார் என்பதால் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியை போன்றே சச்சின் டெண்டுல்கரின் முக்கிய சாதனையை முறியடிக்க ரோகித் சர்மா காத்துள்ளார். அதாவது ரோகித் சர்மா இந்த தொடரில் இன்னும் 50 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி 2வது இடம் பிடிப்பார்.

அதிக ரன் குவித்தவர்கள்

அதிக ரன் குவித்தவர்கள்

சச்சின் 39 போட்டிகளில் 1,573 ரன்களை குவித்திருந்தார். தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 33 போட்டிகளில் விளையாடி 1,523 ரன்களை குவித்துள்ளார். எனவே அவரின் சாதனையை முறியடிக்க இன்னும் 50 ரன்கள் தேவை. இப்பட்டியலில் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 39 போட்டிகளில் 2,235 ரன்களை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அடித்துள்ளார்.அவரின் சராசரி 72.09 ஆகும்.

இந்திய களம்

இந்திய களம்

இந்திய களத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே ரோகித் சர்மா சச்சினை முந்திவிட்டார். அதாவது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 1040 (16 போட்டிகளில்) ரன்கள் அடித்துள்ளார். ஆனால் சச்சின் 17 போட்டிகளில் 677 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

கூடுதல் சிறப்பு

கூடுதல் சிறப்பு

முதல் ஒருநாள் போட்டியிலேயே ரோகித் இந்த சாதனையை படைத்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இது சர்வதேச அளவில் இந்தியா விளையாடப்போகும் 1000வது ஒருநாள் போட்டியாகும். முதல் நாடும் இந்தியா தான் ஆகும். இந்த பெருமைமிகுந்த போட்டியில் கேப்டன்சி செய்யும் ரோகித் சர்மா, இந்த சாதனை படைத்தால் கூடுதல் சிறப்பு.

Story first published: Saturday, February 5, 2022, 12:47 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+