Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அட இதை கவனச்சீங்களா”.. தோனியின் சாயலில் தெரிந்த ரோகித் சர்மா.. முதல் ஒருநாள் போட்டியில் சுவாரஸ்யம்!

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் தோனியின் சில சாயல்கள் இருந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

Recommended Video

Rohit Sharma Captaincy-ல் Dhoni-ன் சாயல் தெரிந்த சுவாரஸ்யம்

இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் விளையாடிய இந்தியா 28 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

 ரோகித்தின் கேப்டன்சி

ரோகித்தின் கேப்டன்சி

இந்திய அணியின் 1000வது ஒருநாள் போட்டி என்பதால் ரோகித் சர்மா, தன் மீதான கேப்டன்சி எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்தார். குறிப்பாக ஃபீல்டிங்கின் போது அவர் எடுத்த அனைத்து டி.ஆர்.எஸ் முடிவுகளுமே மிகவும் பரபரப்பாக சென்றபோதும் ஆட்டத்தின் முடிவை மாற்றி அமைத்தன. ஒன்று கூட தோல்வியில் முடியவில்லை.

முதல் ரிவ்யூவ்

முதல் ரிவ்யூவ்

ஆட்டத்தின் 12வது ஓவரின் போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் டேரன் பிராவோ எல்.பி.டபள்யூ ஆனார். ஆனால் மிகவும் பேட்டிற்கும், பேடிற்கும் மிகவும் நெருக்கமாக பந்து இருந்ததால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. சற்றும் யோசிக்காத கேப்டன் ரோகித் சர்மா 3வது நடுவரின் ரிவ்யூவ் கேட்டார். இறுதியில் அவர் நினைத்ததுபடி ப்ராவோவுக்கு அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.

அச்சுறுத்திய பேட்ஸ்மேன்

அச்சுறுத்திய பேட்ஸ்மேன்

இதே போல இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார் என கருதப்பட்ட நிகோலஸ் பூரண் 20வது ஓவரின் போது சாஹல் பவுலிங்கில் எல்.பி.டபள்யூ ஆனார். ஆனால் நாட் அவுட் தான் அம்பயரின் முடிவு. பேட்ஸ்மேனே தான் அவுட் இல்லை என்பதில் தெளிவாக இருந்த போதும், ரோகித் ரிவ்யூவ் எடுத்து ஷாக் கொடுத்தார். அதில் மிடில் ஸ்டம்பிற்கு பந்து சென்றது தெரியவந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் யுவேந்திர சாஹல் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றினார்.

விராட் கோலி உதவி

விராட் கோலி உதவி

3வது ரிவ்யூவ் தான் கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்தது. ஏனென்றால் இதில் ரோகித்துடன் சேர்த்து முன்னாள் கேப்டன் விராட் கோலியும் ரிவ்யூவ் எடுக்க உதவினார். 22வது ஓவரில் சாஹல் வீசிய பந்து ஷாமார் ப்ரூக்ஸ் பேட்டில் பட்டு கீப்பர் கேட்ச் ஆனாது. ஆனால் பந்து கால்பேடில் தான் பட்டது என நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இந்திய அணி வீரர்களே அதை தான் நினைத்தனர். அப்போது ரோகித்திற்காக விராட் கோலியும் அருகில் வந்து "பந்து பேட்டில் பட்டது என நினைக்கிறேன்" எனக்கூறியதுடன் ரிவ்யூவ் எடுக்க வைத்தார். அதன் முடிவும் வெற்றிகரமாக அமைந்தது.

தோனியின் முடிவுகள்

தோனியின் முடிவுகள்

தோனியின் கேப்டன்சியில் அதிகம் கவனம் ஈர்த்தது அவரின் ரிவ்யூவ் முடிவு தான். அவர் ரிவ்யூவ் எடுத்தால் சரியாக தான் இருக்கும் என நடுவர்களே நினைத்தது உண்டு. அப்படி இருக்கையில் ரோகித் சர்மாவும் தனது முதல் போட்டியிலேயே வெற்றிகரமான ரிவ்யூக்களை கேட்டிருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது

Story first published: Monday, February 7, 2022, 13:00 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+