Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11... ரோகித் சர்மாவே கொடுத்த அப்டேட்.. முற்றிலும் இளம் படை

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் ரோகித் சர்மாவே அப்டேட் கொடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் முதல் போட்டி நாளை மதியம் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய இந்திய அணி, இந்த முறை சிறப்பான கம்பேக் கொடுக்க முயன்று வருகிறது.

ஓப்பனிங் வீரர்கள்

ஓப்பனிங் வீரர்கள்

சில வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இந்திய ப்ளேயிங் 11 விவரத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாடிற்கு கொரோனா உறுதியானதால் இஷான் கிஷான் ஓப்பனிங் இறங்குவார் என ரோகித் கூறியுள்ளார். கூடுதலாக சேர்க்கப்பட்ட மயங்க் அகர்வால் இன்னும் குவாரண்டைன் காலத்தை முடிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

மிடில் ஆர்டரை பொறுத்தவரை முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி, 4வது வீரராக சூர்யகுமார் யாதவ், 5வது இடத்திற்கு ரிஷப் பண்ட் என வழக்கமான பேட்டிங் வரிசை வந்துள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்கவிருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொரோனா உறுதியானதால் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 5வது வீரராக களமிறங்கி ஃபினிஷர் பணியை ஏற்கிறார்.

 குல்சா ஜோடி

குல்சா ஜோடி

சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து பேசிய ரோகித், குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடி கடந்த காலங்களில் பல சிறப்பான ஆட்டத்தை கொடுத்துள்ளனர். எனவே அந்த ஜோடியை மீண்டும் ப்ளேயிங் 11-க்குள் கொண்டு வரவுள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.

Recommended Video

மனம் திறந்த Rohit Sharma | Virat Kohli Under Rohit Sharma Captaincy | Oneindia Tamil
வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு படையில் அணியின் முன்னணி தேர்வாக முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோர் உள்ளனர். இதில் ஷர்துல் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தென்னாப்பிரிக்க தொடரிலேயே தங்களது பேட்டிங் திறமையை காட்டியுள்ளதால் இந்திய அணிக்கு மிக நீண்ட பேட்டிங் வரிசையும் அமையவுள்ளது.

Story first published: Saturday, February 5, 2022, 16:47 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+