Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியேற்றப்படும் ரிஷப் பண்ட்? 2வது போட்டிக்கான ப்ளேயிங் 11ல் மாற்றம்.. சீனியர் வருகையால் ட்விஸ்ட்!

அகமதாபாத்: இந்திய அணியில் சீனியர் ஒருவர் வருகை தந்துள்ளதால் ரிஷப் பண்ட் வெளியேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்பதால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

முதல் ஒருநாள் போட்டியில் ஓய்வில் இருந்த துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் 2வது போட்டிக்காக அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அவர் ஓப்பனிங் இடத்திற்கான தேர்வாக இருக்கலாம். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஷிகர் தவானும் குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ளதால் தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.

கடினமான சூழல்

கடினமான சூழல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற தவான் 3 போட்டிகளில் 2 அரைசதம் அடித்து தன்னை நிரூபித்தார். இதனால் அவரை கொண்டு வரவேண்டியுள்ள கட்டாயத்தில் அணி நிர்வாகம் உள்ளது. மற்றொரு புறம் கே.எல்.ராகுல் துணைக்கேப்டன் என்பதால் அணிக்குள் சேர்த்தே ஆக வேண்டும் என்ற சூழல் உள்ளது.

முடிவு கட்டிய ரோகித்

முடிவு கட்டிய ரோகித்

இந்நிலையில் அதற்கு முடிவுகட்ட ரோகித் புதிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதாவது கே.எல்.ராகுல் ஓப்பனிங்கை விட மிடில் ஆர்டரில் மிகவும் சிறப்பாக ஆடக்கூடியவர். மேலும் அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகும். இதனால் இளம் வீரர் ரிஷப் பண்ட்-ஐ நீக்கிவிட்டு அந்த இடத்தில் கே.எல்.ராகுலும், ஓப்பனிங்கில் ஷிகர் தவானையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended Video

IND vs WI: I'm Ready To Bat Wherever Team Requires, Been Bowling in Nets As Well- S.Yadav
ரிஷப் பண்ட் ஏன்?

ரிஷப் பண்ட் ஏன்?

கடந்த சில போட்டிகளாகவே ரிஷப் பண்ட்-ன் ஆட்டம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த முதல் போட்டியில் கூட 11 ரன்களுக்கு வெளியேறினார். தென்னாப்பிரிக்க தொடரிலும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை என்பதால் ரோகித் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

Story first published: Wednesday, February 9, 2022, 12:39 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+