“கெஞ்சிக்கேட்கிறேன்; அத மட்டும் பன்னிடுங்க” இந்திய வீரர்களிடம் ரோகித் சர்மா கேட்ட விஷயம்.. சரிதானே
அகமதாபாத்: இந்திய அணி வீரர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என கேப்டன் ரோகித் சர்மா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிவாகைச் சூடியது.
.

முதல் ஒருநாள் போட்டி
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, யுவேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்த பவுலிங்கில் திணறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஹோப் (8), ப்ரெண்டன் கிங் (13), ப்ராவோ (18), ஷாமார் ப்ரூக்ஸ் (12), பூரண் (18) என அடுத்து வெளியேறினர். கேப்டன் பொல்லார்ட் டக் அவுட்டாகி நடையை கட்டினார். இறுதியில் ஜேசன் ஹோல்டன் மட்டும் 57 ரன்கள் அடிக்க அந்த அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் அரைசதம்
177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா (60), இஷான் கிஷான் (28) ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (34) - தீபக் ஹூடா (26) ஜோடி நிதானமாக விளையாடியதால் 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த அணித்தரப்பில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ரோகித் தந்த விளக்கம்
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா "எப்போதுமே அனைவராலும் மிகச்சிறப்பாக செயல்பட முடியாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று அதை செய்துள்ளோம். அனைவருமே சிறப்பாக செயல்பட்டோம். இதே போல தொடர் வெற்றிகளை இந்திய அணி குவிக்கும் என நம்புகிறேன்.

வேண்டுகோள்
அனைத்து வீரர்களின் ஒரே லட்சியம், அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான். உங்களிடம் இருந்து இக்கட்டான சூழல்களில் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை செய்துவிட வேண்டும். வீரர்களிடம் ஒரேயொரு வேண்டுகோளை மட்டும் முன்வைக்கிறேன். உங்களது சாதனைகளை நீங்களே முறியடிக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் நம்மால் தொடர்ந்து மேம்பட முடியும். எனக்கு தற்போது நல்ல புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. இது தொடர வேண்டும் என ரோகித் சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications