
ஓப்பனிங் வீரர் யார்?
இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கே.எல்.ராகுலும் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், ரோகித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் களமிறங்குவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. எனவே இதற்காக சீனியர் வீரரான மயங்க் அகர்வால் அவசர அவசரமாக அணிக்குள் அழைக்கப்பட்டு குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா புது அறிவிப்பு
இந்நிலையில் கடைசி நேரத்தில் ரோகித் சர்மா புதிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அதாவது டி20 தொடருக்காக சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர் இஷான் கிஷான், ஒருநாள் அணியிலும் சேர்க்கப்படுவதாகவும். அவர் தான் முதல் ஒருநாள் போட்டியில் தன்னுடன் ஓப்பனிங் களமிறங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

என்ன காரணம்
வெளியில் இருந்து அணிக்குள் சேர்க்கப்பட்ட மயங்க் அகர்வால் தற்போது கட்டாய குவாரண்டைனில் உள்ளார். அவரின் குவாரண்டைன் காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனினும் எந்தவித பயிற்சியும் இல்லாமல் நேரடியாக அவரை முதல் போட்டிக்குள் கொண்டுவர ரோகித் சர்மா விரும்பவில்லை. அவர் மீது நம்பிக்கை இல்லாததால் இஷான் கிஷானை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

சிறந்த வாய்ப்பு போச்சே
ரோகித்தின் இந்த செயலால் மயங்க் அகர்வால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இன்றுடன் குவாரண்டைன் முடிந்த போதும், ஏன் வாய்ப்பு தரவில்லை?, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் ஏன் ஒருநாள் போட்டியில் நம்பிக்கை வைக்கவில்லை என கடும் கோபத்தில் உள்ளார். 2வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் அணிக்கு வந்துவிடுவார். இதனால் முதல் ஒருநாள் போட்டி தான் மயங்கிற்கு இருக்கும் சிறப்பான வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications