Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இளம் வீரர்களுக்கு வழி விடனுமா?”.. கேப்டன் ரோகித் சிரிப்புடன் தந்த சூசக பதில்.. ரசிகர்கள் அதிருப்தி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்காக வாய்த்திறந்த ரோகித் சர்மா புதிய பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக இந்திய அணியின் திட்டம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணியில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பவுலிங்கில் பிரஷித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் என பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்து வருவது தெளிவாக தெரிகிறது.

சர்ச்சைக்குரிய கேள்வி

சர்ச்சைக்குரிய கேள்வி

இந்நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து ரோகித் சூசக பதில் கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் தான் ஓப்பனிங் களமிறங்குவார் என அறிவித்தார். இதனையடுத்து அவரிடம், "இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே டாப் 3 இடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா?" என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சூசக பதில்

சூசக பதில்

இதற்கு பதிலளித்த ரோகித், "இளம் வீரர்கள் எனக் கருதி ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் இஷானுக்கு ஓப்பனிங் கொடுத்துவிட்டு நானும், ஷிகர் தவானும் வெளியே உட்காரச் சொல்கிறீர்களா? அவர்களுக்கான நேரம் எதிர்காலத்தில் எப்போதாவது வரும், என நக்கலாக சிரித்துக் கொண்டே கூறினார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கொந்தளித்துள்ளனர். இளம் வீரர்களுக்கு ஓப்பனிங் இடம் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியதற்கே ரோகித் சுயநலமாக பதிலளித்துள்ளார். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தற்போது ஏன் வாய்ப்பு கிடைக்கக்கூடாது. சீனியர் இருக்கும் போது இளம் வீரர்கள் வாய்ப்பு பெறக்கூடாதா, அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தான் இளைஞர்கள் விளையாட வேண்டுமா? என விளாசி வருகின்றனர்.

Recommended Video

மனம் திறந்த Rohit Sharma | Virat Kohli Under Rohit Sharma Captaincy | Oneindia Tamil
ருதுராஜ் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்

இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக ருதுராஜ் கெயிக்வாட் உருவெடுத்து வருகிறார். அவருக்கு ஒவ்வொரு தொடரிலும் பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்காததால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கொரோனாவல் அது தற்போது தள்ளிப்போயுள்ளது.

Story first published: Saturday, February 5, 2022, 16:18 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+