“இவரும் விராட் கோலி மாதிரிதான்” சாஹலை கடுமையாக திட்டிய ரோகித் சர்மா.. வெளியான ஸ்டம்ப் மைக் ஆடியோ!
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சாஹலை கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக திட்டிய ஸ்டம்ப் மைக் ஆடியோ வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 239/9 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தொடரையும் 2 - 0 எனக் கைப்பற்றியுள்ளது.

2வது ஒருநாள் போட்டி
இந்த தொடரில் ஸ்டம்ப் மைக் ஆடியோக்கள் இந்திய ரசிகர்களுக்கு விருந்துப்படைத்து வருகிறது என்றே கூறலாம். முதல் போட்டியில் ரோகித் மற்றும் விராட் ஒன்றாக பேசி ரிவ்யூவ் எடுத்தது, பிரஷித் கிருஷ்ணாவை ரோகித் சர்மா கெட்ட வார்த்தையில் திட்டியது போன்ற பல சுவாரஸ்ய விஷயங்கள் களத்தில் இருந்து வெளியாகின.

பிரச்சினை என்ன
இந்நிலையில் 2வது போட்டியிலும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய அணி பந்துவீசிச்சில் ஆட்டத்தின் 45 ஓவரை வாஷிங்டன் வீச வந்த போது ரோகித் சர்மா ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார். பேட்டிங் செய்துக்கொண்டிருந்த ஜோசஃப், சிக்ஸர் அடிப்பார் என்று எண்ணியதால், பவுண்டரி அருகில் வேகமாக ஃபீல்டர்களை மாற்றி வந்தார். அப்போது சாஹல் மட்டும் பொறுமையாக வந்துள்ளார்.

ரோகித் சர்மா சாடல்
இந்த செயலால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா, டேய், உனக்கு என்னடா ஆச்சு? ஏன் உன்னால வேகமா நடக்க முடியாதா?.. ஒழுங்கா சீக்கிரம் போய் அங்க நில்லு" என கோபத்துடன் திட்டினார். இது மற்ற வீரர்களுக்கும் சற்று சங்கடத்தை கொடுத்தது. மேலும் ஆடியோவும் ஸ்டம்ப் மைக் மூலம் வெளியானதால் ரோகித்தின் மற்றொரு முகம் தெரியவந்துள்ளது.

பிரஷித் விவகாரம்
இதே போல தான் முதல் போட்டியில் கெட்ட வார்த்தையில் அவர் திட்டியிருந்தார். பவுண்டரி லைனுக்கு சென்ற பந்தை பிரஷித் கிருஷ்ணா சரியாக தடுக்காததால், பொறுமை இழந்து திடீரென கெட்ட வார்த்தைகளில் திட்டித்தீர்த்தார். இதனால் ரோகித் சர்மாவும், விராட் கோலியை போன்று தான் நடந்துக்கொள்கிறார் என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

உண்மை காரணம்
ஆனால் கேப்டன்களுக்கு களத்தில் உள்ள அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். சில நேரம் தோனியே திட்டி பார்த்திருப்போம். சரியான நேரத்திற்குள் ஓவரை போட்டு முடிக்க வேண்டும். ரன்கள் கசியக்கூடாது என பல விஷயங்களால் கேப்டன்கள் கோபப்படுவது சகஜம் தான் என வல்லுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications