Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெ.இண்டீஸை வைத்து தீபாவளி கொண்டாடிய ரோஹித்.. பரிதாபமாக கிரிக்கெட் ஆடும் வெ.இண்டீஸ்

லக்னோ: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமாக பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது. ரோஹித் சர்மா 7 சிக்ஸர்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

முன்னதாக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 எனவும், ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 எனவும் தொடர்களை கைப்பற்றி இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது இந்தியா.

முதல் டி20 போட்டியில் இந்தியா 110 ரன்கள் என்ற சிறிய இலக்கை துரத்தி வெற்றி பெற தடுமாறியது. எனினும், 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியிலாவது இந்தியா சிறப்பாக ஆடுமா அல்லது மீண்டும் தடுமாறுமா? வெஸ்ட் இண்டீஸ் அணி தன் அதிரடியைக் காட்டுமா? என்ற எதிர்பார்ப்போடு துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் என்ன மாற்றம்?

இந்திய அணியில் என்ன மாற்றம்?

முதல் போட்டியில் உடல்நிலை கோளாறால் பங்கேற்காத புவனேஸ்வர் குமார், இரண்டாம் டி20 போட்டியில் களம் இறங்கினார். முதல் போட்டியில் ஆடிய உமேஷ் யாதவ் அவருக்கு வழி விட்டு ஓய்வில் இருக்கிறார். முதல் போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்கள் இரண்டாவது போட்டியிலும் இடம் பெற்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணி மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோவ்மன் போவெல் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நிகோலஸ் பூரன் இடம் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டது. இந்த போட்டியில் சுதாரிக்காவிட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழக்க நேரிடும்.

அணி வீரர்கள் விவரம்

அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, புவனேஸ்வர் குமார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி - டேர்ரன் பிராவோ, ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மையர், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), கீமோ பால், ஃபேபியன் ஆலென், கேரி பியர்ரே, ஓஷேன் தாமஸ், நிகோலஸ் பூரன்.

இந்தியா பேட்டிங் விவரம்

இந்தியா பேட்டிங் விவரம்

இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் போட்டியில் துவக்க வீரர்கள் ரோஹித், தவான் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இந்த போட்டியில் அவர்கள் நிறுத்தி நிதானமாக ஆட்டத்தை துவக்கினர். தாமஸ் வீசிய முதல் ஓவரை ரோஹித் சர்மா ரன் ஏதும் அடிக்காமல் மெய்டனாக ஆடினார். அடுத்த இரண்டு ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதன் பின் இருவரும் அதிரடிக்கு மாறி பவுண்டரிகளாக அடித்தனர். தவான் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி 5 ரன்களில் வெளியேறினார். ரோஹித் 7 சிக்ஸர்கள் அடித்து டி20 போட்டிகளில் நான்காவது சதம் அடித்தார். ஏற்கனவே, டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்து இருந்த ரோஹித், அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழந்து 195 ரன்கள் எடுத்தது. ரோஹித் 111, ராகுல் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

வெ.இண்டீஸ்-க்கு 196 ரன்கள் இலக்கு

வெ.இண்டீஸ்-க்கு 196 ரன்கள் இலக்கு

196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் ஷாய் ஹோப் 6, ஹெட்மையர் 15, பிராவோ 23, பூரன் 4, பொல்லார்ட் 6, ஆலென் 0, பால் 20, பியர்ரே 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து விக்கெட்கள் இழந்து வந்ததால், ரன் வேகம் குறைந்து போட்டியை தன் கைப்பிடியில் இருந்து நழுவ விட்டது. 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்கள் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

Story first published: Tuesday, November 6, 2018, 22:34 [IST]
Other articles published on Nov 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+