Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் வெளுக்கப் புறப்பட்ட இந்திய படை… வெஸ்ட் இண்டீஸ் திருப்பி அடிக்குமா?

Recommended Video

அதே அணியுடன் மீண்டும் வெளுக்கப் புறப்பட்ட இந்திய வீரர்கள்- வீடியோ

ஹைதராபாத் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. அதற்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது.

இந்திய படை தயார்

இந்திய படை தயார்

இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கப் போகும் 12 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில் எந்த மாற்றமும் இன்றி முதல் டெஸ்டில் இடம் பெற்ற அதே 11 வீரர்களும், 12வது இடத்தில் உத்தேச வீரராக ஷர்துல் தாக்குரும் இடம் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் யார்?

பந்துவீச்சில் யார்?

முதல் டெஸ்டில் இந்தியா மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு களம் இறங்கியது. இரண்டாவது டெஸ்டிலும் அது தொடரும் என தெரிகிறது. வேகப்பந்துவீச்சில் மட்டும் மாற்றம் செய்ய சிறிய வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்டில் உமேஷ் யாதவ், முகமது ஷமி பங்கேற்ற நிலையில், இரண்டாம் டெஸ்டில் ஷர்துல் தாக்குர் இடம் பெற்று அவருக்கு இடம் அளிக்க இருவரில் ஒருவர் வெளியேறுவார்களா என்ற சந்தேகம் உள்ளது.

மீண்டும் ப்ரித்வி ஷா

மீண்டும் ப்ரித்வி ஷா

துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ராகுல் தொடர்கின்றனர். இதில் ராகுல் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். தன் இடத்தை தக்க வைக்க அவர் இந்த போட்டியில் ரன் குவித்தே ஆகா வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். முதல் போட்டியில் கலக்கிய ப்ரித்வி ஷா மீது பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் அவரும் ரன் குவிக்க வேண்டிய அழுத்தத்தில் தான் இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் மீளுமா?

வெஸ்ட் இண்டீஸ் மீளுமா?

முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது டெஸ்டில் மீளுமா? வெற்றி பெறாவிட்டாலும், ஒரு அட்டகாசமான போராட்டத்தை வெளிப்படுத்துமா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் - உத்தேச அணி

இரண்டாவது டெஸ்ட் - உத்தேச அணி

12 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ராகுல், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்

Story first published: Friday, April 17, 2020, 21:07 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+