Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு கம்பேக்கா.. ஒரே தொடரில் பழைய முகங்களின் ஆதிக்கம்.. பிசிசிஐ கொடுத்த சர்ப்ரைஸ்!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு முன்னணி வீரர்கள் மீண்டும் அணிக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

Recommended Video

Powell, Pooran Innings seals win for West Indies against England in 3rd T20 | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க தொடரை தொடர்ந்து இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயத்தால் தொடரில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த முன்னணி வீரர்கள் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

குல்தீப்

குல்தீப்

இந்த பட்டியலில் முதல் ஆளாக குல்தீப் யாதவ் உள்ளார். கடந்த ஓராண்டிற்கும் மேல் இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு வந்தார். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஒரு வாய்ப்பு கூட பெறாத குல்தீப், 2வது பாதியிலும் காயத்தால் வெளியேறினார். உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது பிசிசிஐ. ஏனென்றால் ஜடேஜா, அஸ்வினுக்கு பிறகு ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சு ஜோடியை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் மீண்டும் பிசிசிஐ உள்ளது.

சர்பரைஸ் தேர்வு

சர்பரைஸ் தேர்வு

ஐபிஎல் தொடரில், தனது சிறப்பான ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்து வரும் தீபக் ஹூடா இந்திய அணி தேர்வாளர்களால் கண்டுக்கொள்ளப்படவே இல்லை. கடந்த 2017, 2018ம் ஆண்டுகளில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ப்ளேயிங் 11ல் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்த முறையாவது ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புள்ளது.

தமிழக வீரருக்கு வாய்ப்பு

தமிழக வீரருக்கு வாய்ப்பு

இதே போல தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். அதன்பின்னர் டி20 போட்டிகளில் மட்டும் அவ்வப்போது விளையாடினார். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கொரோனா உறுதியானதால் வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில் இந்த முறை தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட் அணி

ஒருநாள் கிரிக்கெட் அணி

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ருதுராஜ் கெயிக்வாட், ஷிகர் தவான், தீபக் ஹூடா, தீபக் சஹார், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்

டி20 கிரிக்கெட் அணி

டி20 கிரிக்கெட் அணி

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன்,விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய், அக்சர் பட்டேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்சல் பட்டேல்.

Story first published: Thursday, January 27, 2022, 11:15 [IST]
Other articles published on Jan 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+