Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கறுப்பு பட்டைக்குள் இவ்வளவு பெரிய விஷயமா?? இந்திய வீரர்கள் செய்த விஷயம்.. பூரிப்படைந்த ரசிகர்கள்!!

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் செய்த விஷயம் ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் மோதி வரும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் செயல்

இந்திய அணியின் செயல்

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் எந்த அளவிற்கு வியப்பை ஏற்படுத்தியதோ, அதனை விட அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்த விஷயம் அவர்கள் கையில் அணிந்திருந்த கருப்புப்பட்டை. ஆட்டம் தொடங்கியது முதல் அனைத்து இந்திய வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு பட்டையை கட்டிக்கொண்டு விளையாடினர்.

என்ன காரணம்

என்ன காரணம்

திடீரென அவர்கள் இதனை செய்வதற்கு என்ன காரணம் எனப்புரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில் அதற்கான விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவின் பழம்பெரும் திரையுல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை இயற்கை எய்தினார். பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஞ்சலி

அஞ்சலி

அவருக்கு மரியாதை செலுத்தி விதமாக இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது கையில் கருப்புப்பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர். பிசிசிஐ-ம் தனது ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கருக்காக இரங்கலை தெரிவித்துள்ளது. இந்த செயல்களால் ரசிகர்கள் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 177 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 67 ரன்களை எடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

Story first published: Sunday, February 6, 2022, 19:52 [IST]
Other articles published on Feb 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+