ஒரேயொரு மெயில்..! ஷாக்கான கிரிக்கெட் உலகம்..!! ரத்தாகிறது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்..?
Recommended Video
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் எதிரொலியாக, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரையும் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. டி 20, ஒருநாள் தொடர்கள் முடிந்த நிலையில், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இ மெயில் ஒன்று வந்தது. அதாவது, அதிகாரப்பூர்வ இமெயிலுக்கு, தீவிரவாத அமைப்புகள் அல்லாத அடையாளம் தெரியாத அந்த மெயில் கடந்த வெள்ளிக்கிழமை வந்தது.

தீவிரவாத தாக்குதல்
அதில் வெஸ்ட் இண்டீசில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டது. அதைப் பார்த்து அரண்டு போன பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உடனடியாக அதை சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசிக்கு அனுப்பியது.

பிசிசிஐ 24 மணி நேரம்
அந்த இமெயிலை பிசிசிஐயும் அடுத்த 24 மணிநேரத்தில் பெற்றது.பின்னர் பிசிசிஐ, மத்திய அமைச்சரகம் மூலம் ஆன்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருமாறு வலியுறுத்தியது.

மிரட்டல் இ மெயில்
மெயில் தகவலை உறுதி செய்த பிசிசிஐ, அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்லுங்கள் என்பது போல இருந்தாகவும் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து பிசிசிஐயின் சிஇஓ ராகுல் ஜாக்ரி கூறியதாவது: மத்திய அமைச்சகத்துக்கு அந்த மிரட்டல் இமெயிலை அனுப்பினோம். ஆன்டிகுவா தூதரத்தை தொடர்பு கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் படி தெரிவித்துள்ளோம் என்றார்.

கருத்து இல்லை
இந்த விவகாரத்தில் ஐசிசியோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் எந்த கருத்துகளையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதை தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

22ம் தேதி தொடக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் ஆட்டங்கள் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது இந்திய அணி.


Click it and Unblock the Notifications