Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்.. எந்த சேனலில் பார்ப்பது? எந்த ஓடிடியில் பார்க்கலாம்

பார்பிடாஸ் : வெஸ்ட் இண்டீஸ் க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் அதன் பிறகு பங்கேற்கும் முதல் தொடர் இது என்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

India vs west indies test series when and where to watch- live streaming details

இழந்த பெருமையை மீட்பதற்காக இந்திய அணி பலம் குன்றிய வெஸ்ட் இண்டீசை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. மேலும் சீனியர் வீரர் புஜாரா இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் ருதுராஜ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் ஒளிபரப்ப எந்த டிவி சேனல்களும் முன் வருவதில்லை. இதற்கு காரணம் நேரம் வித்தியாசம்தான். இந்தியாவில் இரவு நேர பொழுது தான் வெஸ்ட் இண்டீஸில் பகல் நேரம் ஆகும். இதனால் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் இரவு நேரத்தில் பார்க்கும் வகையில் இருக்கும்.

இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் இந்தத் தொடரை ஒளிபரப்பு செய்ய எந்த டிவி சேனல்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்ய முன்வந்துள்ளது. டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தங்கள் சேனலில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி இரவு நேரத்தில் காட்ட இருக்கிறார்கள்.

இதேபோன்று ஓடிடியில் இந்த தொடரை இலவசமாக ஜியோ சினிமா ஒளிபரப்பு செய்ய உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா வெற்றிகரமாக ஒளிபரப்பிய நிலையில் தற்போது இந்தியா தொடரையும் அவர்கள் காட்ட இருக்கிறார்கள். மேலும் fancode ஆப்பும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை தங்களது ஓடிடியில் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.

இதனால் ரசிகர்கள் பணம் கட்டாமலேயே டிடியிலும் ஜியோ சினிமாவிலும் இந்த தொடரை பார்க்க முடியும். டெஸ்ட் போட்டி இரவு 7:00 மணிக்கும், ஒரு நாள் போட்டி 7.30 மணிக்கும், டி20 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 8, 2023, 15:14 [IST]
Other articles published on Jul 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+