ஷாரூக்கானுக்கு ஏமாற்றம்!! அணிக்கு திரும்பிய சீனியர்.. IND vs WI 3rd ODI ப்ளேயிங் லெவனிங்கில் மாற்றம்
அகமதாபாத்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது.

இந்த தொடரை ஏற்கனவே இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று கைப்பற்றிய நிலையில் இன்று வைட் வாஷ் செய்யும் முனைப்புடன் உள்ளது.
அந்தவகையில் பல மாற்றங்கள் கொண்ட அணியுடன் வெற்றியை பெற ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்..ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ஷிகர் தவான் மீண்டும் களமிறங்கி உள்ளார். கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார்.
சூர்யகுமார் யாதவ் தனக்கு வழங்கிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதால், அவரது இடம் தொடர்கிறது. தபக் ஹூடா நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்பு தொடர்கிறது. இவர்களுக்கு உறுதுணையாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல், ஆகியோர் களமிறங்குவார்கள்.
வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வதால், அவரை ஃபினிஷரின் இடத்தில் வைத்து ஆட்டத்தை முடிக்கவுள்ளனர். தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுழற்பந்துவீச்சாளராக குல்தப் யாதவ் தேர்வு செய்யப்பட்டு சாஹலுக்கு ஓய்வு நீண்ட நாட்களுக்கு பிறகு குல்தீப் அணிக்குள் வருவதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதே போன்று ஷர்துலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தீபக் சாஹருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications