
ஒருநாள் கிரிக்கெட்
இந்த தொடரில் தான் முதல் முறையாக ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் விராட் கோலி விளையாடவுள்ளார். இவர்களின் கூட்டணி எப்படி இருக்கப்போகிறது?, ஃபீல்டிங்கின் போது எப்படி ஒற்றுமையாக செயல்படப்போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சாதனை
இந்நிலையில் ரோகித் சர்மா - கோலி இணைந்து புதிய சாதனையை படைக்கவுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்த ஜோடி இன்னும் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை குவித்த 3வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8வது ஜோடி என்ற பெருமை வந்து சேரும்.

அசத்தல் புள்ளிவிவரம்
இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி இணைந்து 81 போட்டிகளில் 4,906 ரன்களை குவித்துள்ளனர். இதில் 18 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் ஆகும். எனவே இன்னும் 94 ரன்கள் அடித்தால் புதிய மைல்கல்லை எட்டிவிடுவார்கள்.

பார்ட்னர்ஷிப் பட்டியல்
இவர்களுக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை முதல் இந்தியர்களாக படைத்தனர். அவர்கள் 8,227 ரன்களை குவித்திருந்தனர். 2வது இடத்தில் ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி 5,023 ரன்களை குவித்துள்ளது.

சுவாரஸ்ய விஷயம்
இந்த தொடரில் மற்றொரு சுவாரஸ்யம் விஷயம் என்னவென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரோகித் - விராட் கோலி ஜோடி இதுவரை 982 ரன்களை குவித்துள்ளது. எனவே இவர்கள் இன்னும் 28 ரன்களை அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1,000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள்.


Click it and Unblock the Notifications