Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி இதுதான்!!

Recommended Video

முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கும் பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா- வீடியோ

ராஜ்கோட் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அக்டோபர் 4 முதல் தொடங்கியுள்ளது.

இதில் முதல் டெஸ்டில் இந்திய அணியில் யார் யார் இடம் பிடித்துள்ளார்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா படு மோசமாக தோற்றதை அடுத்து அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

துவக்கம் யார்?

துவக்கம் யார்?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ராகுல் களம் இறங்கி உள்ளனர். இதில் ராகுல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடினார். அங்கே கடைசி டெஸ்டில் அடித்த சதத்தால் இப்போது வாய்ப்பு பெற்றுள்ளார். ப்ரித்வி ஷா முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் அணியில் இடம் பிடித்துள்ளார்.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள்

நடுவரிசை பேட்ஸ்மேன்கள்

நடுவரிசையில் எந்த மாற்றமும் இன்றி புஜாரா, கோலி, ரஹானே இடம் பிடித்துள்ளனர். இதில் ரஹானே இந்த டெஸ்ட் தொடரில் ரன் குவிக்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா தொடரில் அவர் இடம் பெறுவது மிக கடினம். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இவர் ஒருவர் மட்டுமே அணியில் விக்கெட் கீப்பர், வேறு மாற்று வீரர் கூட இல்லை. இவர் இந்த தொடரில் ரன் குவித்தால் இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக மாற வாய்ப்புள்ளது.

3 சுழல் கூட்டணி

3 சுழல் கூட்டணி

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின், ஜடேஜா இருவரும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கை கொடுப்பார்கள் என்பதால், இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சுக்கு முகம்மது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் மட்டுமே உள்ளனர். ஷமி இன்னும் பந்துவீச்சில் ஒரு நிலையான செயல்பாட்டை எட்டவில்லை. அதே போல உமேஷ் யாதவுக்கு அணியில் இடம் என்பது வருவதும், போவதுமாக உள்ளது. இவர்கள் இருவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை நிரூபிக்க வேண்டும்.

Story first published: Thursday, October 4, 2018, 11:12 [IST]
Other articles published on Oct 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+