Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரிதாப தினேஷ் கார்த்திக்குக்கு இனி அல்வா தான்.. சூசகமாக சொல்லும் தேர்வுக் குழு

பரிதாப தினேஷ் கார்த்திக்குக்கு இனி அல்வா தான்.. சூசகமாக சொல்லும் தேர்வுக் குழு

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அதில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் முதன் முறையாக இடம் பெற்றார்.

அது போல ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அது பற்றி தேர்வுக் குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன்

ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன்

தோனி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக செயல்படுவாரா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இது பற்றி கூறிய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், "நிச்சயமாக.. அதே சமயம் தேவை ஏற்பட்டால் அவர் மாற்று விக்கெட் கீப்பராகவும் இருப்பார்" என கூறினார்.

2வது விக்கெட் கீப்பர்

2வது விக்கெட் கீப்பர்

மேலும், "நம் முதல் விக்கெட் கீப்பர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்சமயம், இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்பதை அறியும் முயற்சியில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு பதில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார். சரியான சமயத்தில் இவர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என கூறினார் பிரசாத். இவர் சொல்வதை பார்த்தல் தினேஷ் கார்த்திக்குக்கு அல்வா தான் கிடைக்கும் என தோன்றுகிறது. காரணம், ரிஷப் பண்ட் அதிரடி பேட்ஸ்மேன். தினேஷ் கார்த்திக் பெரும்பாலும் நிதானமாக தான் ஆடுவார்.

மூன்றாவது பந்துவீச்சாளர்

மூன்றாவது பந்துவீச்சாளர்

உலகக்கோப்பை அணிக்கு பும்ரா, புவனேஸ்வர் குமார் தவிர்த்து, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கும் முயற்சியிலேயே ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார் பிரசாத். ஷமி தவிர்த்து கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் என பெரிய பட்டியலே பின்னே காத்திருக்கிறது.

பண்டியா குழப்பம்

பண்டியா குழப்பம்

ஹர்திக் பண்டியா தற்போது காயத்தில் இருப்பதால் அணியில் இடம் பிடிக்கவில்லை. எனினும், அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தால் அவருக்கு யார் இடத்தை கொடுப்பது என்ற குழப்பமும் உள்ளது. அதை பற்றி அந்த நேரத்தில் பதில் கூறுவோம் எனவும் கூறியுள்ளார் பிரசாத். இதற்கு நடுவே, ஆசிய கோப்பையில் காயமடைந்த கேதார் ஜாதவ்வுக்கு இடம் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.

Story first published: Friday, October 12, 2018, 19:05 [IST]
Other articles published on Oct 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+