For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா

இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3க்கு0 என்ற கணக்கில் வென்றது.

தொடர்ந்து ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் நியூசிலாந்தை முழுமையாக வென்றதன் மூலம் ஐசிசியின் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு சென்றுள்ளது.

இந்தூர் மைதானத்தின் ஒரு பகுதி 53 மீட்டரும், 63 மீட்டரும் தான் இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

 200 ரன் பார்ட்னர்ஷிப்

200 ரன் பார்ட்னர்ஷிப்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மான் கில் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்த வீரர்கள் திணறினர். ரோகித் சர்மா 6 சிக்சர்கள், 9 பவுண்டரிகளை விளாசி 83 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். சுப்மான் கில் அதிரடியை காட்டி 72 பந்தில் சதம் விளாசினார்.இதில் 13 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சுப்மான் கில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

 இமாலய இலக்கு

இமாலய இலக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 17 ரன்களில் ரன் அவுட்டாக , மீண்டும் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சூர்யகுமார் 14 ரன்களில் வெளியேற, வாசிங்டன் சுந்தர் 9 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனையடுத்து, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஜோடி அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு இமாலய இலக்கை பெற்று தந்தது. ஷர்துல் தன் பங்கிற்கு 25 ரன்கள் சேர்க்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா 36 பந்தில் ஹர்திக் 54 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

தடுமாறிய நியூசி

தடுமாறிய நியூசி

386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எட்டும் முனைப்புடன் களமிறங்கிய நியுசிலாந்த அணிக்கு தொடக்கத்திலேயே ஹர்திக் பாண்டியா ஷாக் கொடுத்தார். ஃபின் ஆலன் டக அவுட்டாக,2வது விக்கெட்டுக்கு கான்வே, நிக்கோலஸ் ஜோடி 106 ரன்களை சேர்த்தது. நிக்கோலஸ் 42 ரன்களிலும், டேரல் மிட்செல் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நியூசி தோல்வி

நியூசி தோல்வி

ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் , அதிரடியாக விளையடிய சிஎஸ்கே வீரர் கான்வே 100 பந்துகளில் 138 ரன்கள் விளாசி உம்ரான் மாலிக் பந்துவீச்சில் வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டை எடுக்க, நியுசிலாந்து இன்னிங்ஸ் தடுமாறியது. இதனையடுத்து குல்தீப் யாதவ், சாஹல் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் நியுசிலாந்த 295 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

Story first published: Tuesday, January 24, 2023, 21:20 [IST]
Other articles published on Jan 24, 2023
English summary
India white washes New zealand and become no 1 odi team in icc rankings India white washes New zealand and become no 1 odi team in icc rankings நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+