Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்ட்.. நாராசமாக ஆடும் இந்தியா - 19 ஓவர்களில் 4 விக்கெட் காலி- 3 பேர் முட்டை!

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து மோசமாக ஆடி வருகிறது.

19 ஓவர்களிலேயே அது 4 விக்கெட்களை இழந்து விட்டது. அதிலும் 3 பேர் டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர வைத்துள்ளனர். ஒருவர் மட்டும் 4 ரன்களை எடுத்தார்.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், விராத் கோஹ்லி, சட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் டக் அவுட் ஆகினர். கெளதம் கம்பீர் 4 ரன்களில் வீ்ழ்ந்தார்.

India win toss, bat first in fourth test vs England

தற்போது கேப்டன் டோணியும், அஜிங்கியா ரஹானேவும் நிதானமாக ஆடி நிலையைமை சரி செய்ய முயற்சித்து வருகின்றனர். இருவரும் தலா 20 ரன்களைத் தாண்டியுள்ளனர்.

என்ன கொடுமை என்றால் அணியின் ஸ்கோர் 8 ரன்களாக இருந்தபோது இந்த நான்கு பேருமே அடுத்தடுத்து அவுட் ஆகி அணியை நிலை குலைய வைத்து விட்டனர். 4வது ஓவரில் ஒருவரும், 5வது ஓவரில் இருவரும், 6வது ஓவரில் 4வது நபரும் அவுட்டானார்கள்.

ஸ்டுவர்ட் பிராட் அதி பயங்கரமாக பந்து வீசி 2 விக்கெட்களைக் காலி செய்தார். அவர் கொடுத்த ரன்கள் 8 மட்டுமே. அதேபோல ஜேம்ஸ் ஆண்டர்சன் தன் பங்குக்கு 2 விக்கெட்களை வீ்ழ்த்தினார்.

முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், அடுத்தடுத்த டெஸ்டுகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வெற்றி பெற்றன. தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போகும் முக்கியமான டெஸ்ட் இன்று மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கிய போட்டியாகும்.

நேற்றிரவு பெய்த மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அரை மணி நேரம் காலதாமதமாக ஆட்டம் தொடங்கியது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், நடுவரிசை ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா, வேகப்பந்து பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடரில் இதுவரை சோபிக்க தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கவுதம் கம்பீர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார்.

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் காயமடைந்துள்ளதால், அதிவேக பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு புத்துயிர் கொடுக்க தமிழக வீரரும், கேப்டன் டோணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான அஸ்வின் களம் கண்டுள்ளார். இங்கிலாந்து அணி மாற்றம் ஏதுமின்றி தொடருகிறது.

இந்திய அணி: கவுதம் கம்பீர், முரளி விஜய், புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்ய ரகானே, டோணி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், பங்கஜ் சிங், வருண் ஆரோன்.

இங்கிலாந்து அணி: அலியஸ்டர் குக், சாம் ராப்சன், கேரி பல்லான்ஸ், இயான் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, ஜோஸ் பட்லர், கிறிஸ் வோகஸ், கிறிஸ் ஜோர்டான், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Story first published: Thursday, August 7, 2014, 17:58 [IST]
Other articles published on Aug 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+