Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் இந்தியாவை முடக்கினார் வங்கதேச இளம் புயல் ரஹ்மான்

மிர்பூர்: இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் போட்டியில் பிரமாதமாக பந்து வீசிய இளம் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், 2வது போட்டியிலும் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்து இந்தியாவை நிலை குலையச் செய்துள்ளார்.

முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா சொதப்பலாக ஆடி தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இன்று 2வது போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

India win toss, elect to bat in must-win game

இதையடுத்து ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் பேட்டிங்கைத் தொடங்கினர். இதில் ரோஹித் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும் கோஹ்லியும் சேர்ந்து ஸ்கோரை வலுப்படுத்தி வந்தனர். கோஹ்லி 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி வந்த தவானும் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் டோணி 47 ரன்களில் வீழ்ந்தார்.

அம்பட்டி ராயுடு ஏமாற்றமளித்து டக் அவுட் ஆநார். சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட முயன்று கடைசியில் கட்டையைப் போட்டு 34 ரன்களில் வெளியேறினார். அக்ஷர் படேல் டக் அவுட். அஸ்வின் 4 ரன்கள்.

வங்கதேச இளம் வீரர் ரஹ்மான் முதல் ஒரு நாள் போட்டியில் பிரமாதமாக பந்து வீசினார். இன்றைய போட்டியிலும் அவரே இந்தியாவுக்கு எமனாக வந்து சேர்ந்தார். அவர் 5 விக்கெட்களைச் சாய்த்தார்.

முன்னதாக இன்றைய போட்டியில் இந்திய அணியில் ரஹானே நீக்கப்பட்டார். உமேஷ் யாதவ், மோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். அம்பட்டி ராயுடு, அக்ஷார் படேல், தவல் குல்கர்னி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Sunday, June 21, 2015, 17:55 [IST]
Other articles published on Jun 21, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+