Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

194 ரன்கள் விளாசிய இந்திய மகளிர் அணி.. ஜெமிமா, ஸ்மிருதி மந்தனா அதிரடி.. வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி

பிரிஸ்பேன் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டி20 போட்டி நவி மும்பை நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா உமா சேத்ரி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உமா சேத்ரி 26 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்க முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.

ind w vs wi w india women vs west indies women jemimah rodrigues smriti mandhana

எனினும் அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் அடங்கும். இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெமிமா இன்று ஆக்ரோஷமாக விளையாடினார். 35 பந்துகளில் 73 ரன்கள் அவர் குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

ஜெமிமா 9 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர் என 208 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இறுதியில் ரிச்சா கோஷ் 20 ரன்களும், கேப்டன் ஹர்மன் பிரித் கவுர்13 ரன்களும் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க வீராங்கனை ஆக களம் இறங்கிய கேப்டன் ஹேலி மேத்தீவ்ஸ் 1 ரன்னில் வெளியேற குயினா ஜோசப் மட்டும் பொறுப்புடன் விளையாடி 49 ரன்கள் சேர்த்தார். மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற வெளிநாட்டு வீராங்கனை என்ற பெயரை பெற்ற டியாந்திரா டாட்டின் தன்னுடைய பெயரை காப்பாற்றினார்.

28 பந்துகளில் அவர் 52 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சர், நான்கு பவுண்டர்கள் அடங்கும் எனினும் மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 முதல் எடுத்து தோல்வியை தழுவியது. பந்துவீச்சில் இந்திய வீராங்கனை டிடாஸ் சாது டக் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Monday, December 16, 2024, 7:36 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+