For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி சதம்...! புவனேஸ்குமார் அதகளம்..! வெஸ்ட் இண்டீசை 210 ரன்களில் சுருட்டி வீசி வென்ற இந்தியா..!!

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.

தொடர்ந்து, இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமானது. கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப் பட்டது. இந் நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தவான் 2 ரன்னில் வெளியேற, அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலி சதம்

கோலி சதம்

அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பன்ட் 20 ரன்களில் போல்ட் ஆனார். பின்னர் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பொறுப்பாக ஆடியதால், ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

அய்யர் அரைசதம்

அய்யர் அரைசதம்

மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஒரு கட்டத்தில் கோலி 120 ரன்களில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யருடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

279 ரன்கள் குவிப்பு

279 ரன்கள் குவிப்பு

முடிவில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் சார்பில், கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

கெய்ல் 11, ஷாய் ஹோப் 5 ரன்னில் வெளியேறினர். பின்னர் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

லீவிஸ் 65 ரன்கள்

லீவிஸ் 65 ரன்கள்

அதன் பின்னர் களமிறங்கிய இவின் லீவிஸ் மற்றும் ஹெட்மயர் ஜோடியில், ஹெட்மயர் 18 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவின் லீவிஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினனர்.

210ல் சுருண்டது

210ல் சுருண்டது

நிகோலஸ் பூரன் 42 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 18, பிராத் வொய்ட் , கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், தாமஸ் என அனைவரும் வெகு விரைவில் ஆட்டமிழந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புவனேஸ்வர் குமார் 4 விக்.

புவனேஸ்வர் குமார் 4 விக்.

இந்திய அணியின் சார்பில், சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஹமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

ரவீந்திர ஜடேஜா மற்றும் கலீல் அஹமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கோலி தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Monday, August 12, 2019, 7:36 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
India won against west indies in 2nd ODI at port of spain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X