Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோலி முடிஞ்ச்.. வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட பவுலர்கள்.. "லார்ட்" தாக்கூர் செய்த தரமான சம்பவம்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் ட்ரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் விளாசினர்.

India Won by 200 Runs against West Indies in the 3rd ODI and won the Series by 2-1

இதன்பின் சவாலான இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிங் - மேயர்ஸ் இணை களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் முதல் ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரின் 5வது பந்திலேயே கிங் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து முகேஷ் குமார் வீசிய 3வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான மேயர்ஸ் 3 ரன்களிலும், 7வது ஓவரில் கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய உனாத்கட் அட்டாக்கில் வந்து கேசி கார்ட்டியை 6 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து தாக்கூர் வீசிய 12வது ஓவரில் அதிரடிய் வீரர் ஹெட்மயர் 4 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்பர்ட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

பின்னர் குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்து ஒருமுனையில் போராடிக் கொண்டிருந்த அதனேஸை 32 ரன்களிலும், கரியாவை 19 ரன்களிலும் வீழ்த்தி அசத்தினார். 9வது விக்கெட்டுக்கு அல்ஹாரி ஜோசப் - மோட்டீ இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் தாக்கூர் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜெய்டனை 1 ரன்னில் வீழ்த்தினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களுக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணி தரப்பில் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. மேலும் ஆட்டநாயகனாக சுப்மன் கில்லும், தொடர் நாயகனாக இஷான் கிஷனும் தேர்வு செய்யப்பட்டனர்.

Story first published: Wednesday, August 2, 2023, 7:11 [IST]
Other articles published on Aug 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+