ஸ்ரேயாஸ் , சஞ்சு சாம்சன் அபார ஆட்டம்.. இலங்கையை ஊதி தள்ளிய இந்தியா.. தொடர்ந்து 11 போட்டியில் வெற்றி
தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டியில், இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இது இந்தியா தொடர்ந்து வெல்லும் 11வது டி20 போட்டியாகும்.
குளிர்ந்த சூழல் நிலவியதால் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புவனேஸ்வர் குமார்
ஆட்டம் தொடங்கியதும் புவனேஸ்வர் குமார் பந்தை லாவமாக ஸ்விங் செய்தார். இதனால் இலங்கை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். ஜடேஜா வீசிய 8வது ஓவரில் குனதிலகா சிக்ஸ், பவுண்டரி, சிக்ஸ என ரன்களை குவிக்க, அடுத்த பந்தையும் அடிக்க முற்பட்டு 38 ரன்களில் அவுட்டானார். அசலங்கா, காமில், சந்திமால் அகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அதிரடி
இருப்பினும் இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா இந்தியாவின் பந்துவீச்சை பிரிச்சி மெய்ந்தார். அவருக்கு கேப்டன் சனாகாவும் துணை நிற்க, இலங்கை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது. நிசாங்கா 53 பந்துகளில் 75 ரன்கள் விளாசி புவி பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் சனாகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 183 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவரில் இலங்கை அணி 80 ரன்கள் சேர்த்தது.

தடுமாற்றம்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் சேஸிங் அதிர்ச்சிக்கரமாக தொடங்கியது. இதனால் இஷான் கிஷன் பொறுப்புடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் இஷான் கிஷன் 15 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி தடுமாறினாலும், களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

நடுவரிசை அதிரடி
இருவரும் மாறி மாறி சிக்சர் விளாச, இந்திய அணியின் வெற்றி எளிதாக மாறியது. எனினும் சஞ்சு சாம்சன் 39 ரன்களில் அபார கேட்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களத்துக்கு வந்த ஜடேஜா 18 பந்துகளில் 45 ரன்கள் விளாச, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 17 புள்ளி 1 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பிடித்தது. இதன் மூலம் தொடர்ந்து 7வது இருதரப்பு டி20 தொடரை இந்தியா வென்றது.


Click it and Unblock the Notifications