கண்ணீருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் டெண்டுல்கர்!!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டுகாலம் கோலோச்சிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கண்ணீருடன் விடை பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதனைகள் பல படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் தமது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டி நேற்று முன்தினம் டெண்டுல்கரின் சொந்த ஊரான மும்பையில் உள்ள வாங்கடேமைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் சச்சின் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தியா வெற்றி
இந்திய அணி இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கட்டியணைத்து விடை
இப்போட்டி முடிந்தவுடன் சக வீரர்கள் அனைவரையும் கட்டியணைத்து விடைபெற்றார்.

கண்ணீருடன்..
அவர் மைதானத்தைவிட்டு வெளியேறும் போது சகவீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்த சச்சின் டெண்டுல்கர் கண்ணீருடன் விடைபெற்றார்.

கையில் ஸ்டெம்ப்
அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய போது இன்றைய போட்டியின் ஸ்டெம்ப்பை நினைவுக்காக கையில் எடுத்துச் சென்றார். ஒட்டுமொத்த மைதானமே சச்சினுக்கு பிரியா விடை கொடுத்த தருணம் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.

சச்சின் விளையாடிய போட்டிகள்
சச்சின் டெண்டுல்கர் இதுவரை 664 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மொத்த ரன்கள்
டெண்டுல்கர் மொத்தம் 34357 ரன்களைக் குவித்துள்ளார்.

அரைசதங்கள்
சச்சின் மொத்தம் 164 அரை சதங்களை குவித்திருக்கிறார்.

சதங்கள்
டெண்டுல்கர் மொத்தம் நூறு சதங்களை அடித்திருக்கிறார்.

அதிகபட்ச ஸ்கோர்
டெண்டுல்கர் அதிகபட்சமாக 248 ரன்களை எடுத்திருக்கிறார்.
நன்றி சச்சின் டெண்டுல்கர்!


Click it and Unblock the Notifications