வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்..!! வலுவான நிலையில் இந்தியா..!!
Recommended Video
ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் அதிரடி பவுலிங்கில் அந்த அணி 181 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி 20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிந்தது. வரும் 22 ம் தேதி டெஸ்ட் தொடர் நடக்கிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆண்டி குவாவில் நடந்து வருகிறது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால் கேப்டன் பொறுப்பை ரகானே ஏற்றார்.

பேட்டிங்
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. மயங்க் அகர்வால் 12 ரன்னிலும், ராகுல் 36 ரன்களிலும் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரகானே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

ரோகித் அரைசதம்
பின்னர் புஜாராவும், ரோகித் சர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரைசதம் அடித்த ரோகித், 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விஹாரி வந்தார். அவரும் புஜாராவும் நிதானமாக ஆடினார்.

சதமடித்த புஜாரா
சிறப்பாக ஆடிய புஜாரா சதம் அடித்து, வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

181க்கு ஆல் அவுட்
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 56.1 ஓவரில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக ஹோட்ஜ் 51 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னிலை
116 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்து இருந்தது. அகர்வால் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். விகாரி 48 ரன்னும், கேப்டன் ரகானே 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்தியா வலுவான நிலை
இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை கைவசம் 9 விக்கெட் என்ற வலுவான நிலையில் உள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் இந்திய வீரர்களுக்கு முதல் டெஸ்டில் உத்வேகம் அளிக்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications