Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருக்கடியில் சிறப்பாக செயல்பட்டார்கள்.. அவர் ஒரு மேஜிசியன்.. சாதனை கேப்டன் ரோகித் பேட்டி

இந்தூர் : நியூசிலாந்துக்கு தான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதன் மூலம் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் அதிக முறை எதிரணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா எட்டு முறையும், விராட் கோலி ஐந்து முறையும் ,மகேந்திர சிங் தோனி நான்கு முறையும் எதிரணியை வைட்வாஷ் செய்துள்ளார்கள். இந்த நிலையில் தொடரை வென்றது குறித்து ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம் .

நாங்கள் கடந்த ஆறு ஒரு நாள் போட்டிகளாக பல்வேறு பகுதிகளில் சிறப்பாகவே செயல்பட்டோம். 50 ஒவர் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதுதான் ஒரே வழி.

வாய்ப்பு தர நினைத்தோம்

வாய்ப்பு தர நினைத்தோம்

இந்த ஆறு ஒரு நாள் போட்டிகளிலும் நாங்கள் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இன்று கூட முகமது சிராஜ், ஷமி ஆகியோர் இல்லை. பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தோம். சாகல், உம்ரன் மாலிக் ஆகியோரும் இந்திய அணியில் விளையாடக்கூடிய வீரர்களாக நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் எப்படி நெருக்கடியில் செயல்படுவார்கள் என்பது குறித்து அறிய ஆர்வமாக இருந்தோம்.

மேஜிசியன்

மேஜிசியன்

நாங்கள் நினைத்தது போலவே சீனியர்கள் இல்லாமல் பந்துவீச்சாளர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள். சர்துல் தாக்கூர் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். அணியில் அனைவரும் அவரை மேஜிசியன் என்று தான் அழைப்பார்கள். அவர் பந்து வீச வரும்போது எல்லாம் எப்படியாவது விக்கெட்டை எடுத்து விடுவார். குல்திப் யாதவுக்கு இன்னும் அதிகப் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்தால் தான் அவர் தொடர்ந்து தனது பணியை சிறப்பாக செய்வார்.

முக்கியமான வீரர்கள்

முக்கியமான வீரர்கள்

குல்தீப் முக்கிய கட்டத்தில் எனக்கு விக்கெட்டுகளை எடுத்து தரும் வீரராக இருக்கிறார். இது போன்று தொடர்ந்து அவர் விளையாடும்போது அவருடைய பந்துவீச்சும் மேம்படும். சுப்மான் கில்லும் தொடர்ந்து அனைத்து ஆட்டத்தையும் ஒரே மாதிரியாக அணுகுகிறார். நல்ல பார்மில் இருக்கிறோம் என்று மெத்தனமாக இல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் புதிய போட்டியாக என்னை விளையாடுகிறார். ஒரு இளம் வீரராக அணியில் நுழைந்து இந்த அளவுக்கு மனப்பக்குவத்துடன் இருப்பதை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில வீரர்கள் மெத்தனமாக இருந்து சொதப்புவார்கள்.

முக்கியமான சதம்

முக்கியமான சதம்

ஆனால் சுப்மான் கில் அந்த மாதிரி வீரர் கிடையாது. இன்றைய ஆட்டத்தில் நான் அடித்த சதம் எனக்கு மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன். நான் தொடர்ந்து நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறேன். ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன் அடித்து சதம் என்ற மைல்களை என்னால் தொட முடியாமல் இருந்தது. ஆனால் இன்றைய ஆடுகளம் மிகவும் சிறப்பாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் தரவரிசை குறித்து அதிகம் பேசுவது கிடையாது.

சவாலான தொடர்

சவாலான தொடர்

ஆடுகளத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் தான் நாங்கள் யோசிப்போம். ஒரு நாள் தொடர் அடுத்தது கேப்டனாக என்னுடைய குறிக்கோள் டெஸ்ட் தொடர் தான். ஆஸ்திரேலியா திறமையான அணி அவர்களுடன் விளையாடும்போது எங்களுக்கு எதுவும் எளிதாக இருக்காது. அவர்களின் சவாலுக்கு நாங்கள் ஏற்ற வகையில் விளையாடுவோம் என நான் நம்புகிறேன் என்று ரோகித் சர்மா கூறினார்.

Story first published: Tuesday, January 24, 2023, 22:51 [IST]
Other articles published on Jan 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+