Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடப்பாண்டில் 9வது முறை மாற்றம்.. இந்திய அணி கேப்டனாகும் கேஎல் ராகுல்.. எந்த தொடருக்கு தெரியுமா

மும்பை : 2022 ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஒன்பதாவது முறையாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

KL Rahul கேப்டனாக Comeback கொடுக்க உள்ளார் *Cricket

மியூசிக் சேர் விளையாட்டு போல் இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு ஆட்கள் மாறி மாறி வருகின்றனர்.

இதனால் இந்திய அணியின் பொறுப்பில் நிலையற்ற தன்மை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

டிராவிட் விமர்சனம்

டிராவிட் விமர்சனம்

இது குறித்து பயிற்சியாளர் டிராவிட், தொடர்ந்து வெவ்வேறு கேப்டனுடன் பணியாற்றுவது மிகவும் சவாலாக இருப்பதாகவும், ஒவ்வொருவரிடமும் பணியாற்றி யுக்தியை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பணியாற்றினார்.

8 முறை மாற்றம்

8 முறை மாற்றம்

அதன் பிறகு, ஒரு நாள் தொடரில் கே. எல் ராகுலும், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரோகித் சர்மாவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 தொடரில் ரிஷப் பண்ட்டும், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியாவும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் பும்ராவும், இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடர் ஷிகர் தவானும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர் .

9வது கேப்டன் யார்?

9வது கேப்டன் யார்?

இந்த நிலையில் ஒன்பதாவது முறையாக மீண்டும் கேப்டன் பதவிக்கு வருகிறார் கே எல் ராகுல். ராகுலுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் தேதி தொடங்குகிறது.

ஜிம்பாப்வே தொடர்

ஜிம்பாப்வே தொடர்

இதற்கு ராகுல் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஃபார்முக்கு மீண்டு வர ஜிம்பாப்வே தொடரில் விளையாட தேர்வு குழு அறிவுறுத்தியுள்ளது. இதில் ரோகித் சர்மா ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Story first published: Thursday, July 21, 2022, 16:43 [IST]
Other articles published on Jul 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+