Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணில் கூலிங் கிளாஸ்.. கையில் சரக்கு கிளாஸ்..!! உற்சாகத்தில் மிதந்த பிரபல கிரிக்கெட் கோச்..!

Recommended Video

Ravi shastri enjoying in Antigua beach, fans troll

மும்பை: ஒரு கையில் சரக்கு நிரம்பிய டம்பளருடன், ரவி சாஸ்திரி வெளியிட்டு உள்ள போட்டோவை பார்த்து, ரசிகர்கள் கழுவி, கழுவி ஊற்றுகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் பயணம் வெற்றி... அந்த அணியுடனான அனைத்து வகையான போட்டிகளிலும் ஒயிட் வாஷ் செய்திருக்கிறது இந்திய அணி. அதாவது வெஸ்ட் இண்டீசை வேஸ்ட் இண்டீசாக்கி இருக்கிறது. அடுத்து தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.

இந்த தொடர் இந்தியாவில் நடக்கிறது. இந்திய அணிக்கு இந்த தொடர் ரொம்ப முக்கியமான தொடர். காரணம் அது நடப்பது இந்தியாவில். ஆக ரசிகர்கள் இப்போதே ஏகத்துக்கும் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

அதே சாஸ்திரி

அதே சாஸ்திரி

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் நியமிக்கப்பட்டார். அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருக்கும் போது ரிலீஸ் ஆனது.

முகம் சுழிப்பு

முகம் சுழிப்பு

அந்த ஜோருடன், புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அந்த தொடரின் போது, கோச் ரவி சாஸ்திரி செய்த ஒரு காரியம், ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

ஜமைக்கா கடற்கரை

ஜமைக்கா கடற்கரை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டி முடிந்த சமயம். அப்போது ஓய்வை அனுபவிக்க (இந்த போட்டோவை பார்க்கும் போது அப்படி தான் சொல்ல வேண்டும்) ஜமைக்கா நகரின் கடற்கரைக்கு ரவி சாஸ்திரி சென்றிருந்தார்.

கையில் மதுபானம்

கடற்கரைக்கு சென்ற ரவிசாஸ்திரி சும்மா இருந்திருக்கலாம். ஆனால், ஒரு கையில் மதுபானத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அதுவும அந்த போட்டோ எப்படி இருந்தது தெரியுமா? அரை டிராயர், அரை கை சட்டை, தலையில் ஒரு துப்பறிவாளன் பட தொப்பி, அதுக்கு வாகாக ஒரு கூலிங் கிளாஸ், அதை எல்லாம் அலேக்காக தூக்கி சாப்பிடும் அளவுக்கு இடது கையில் ஒரு சரக்கு கிளாஸ்.

ரசிகர்கள் அர்ச்சனை

ரசிகர்கள் அர்ச்சனை

இதில் சன்னி ஜமைக்கா.. எனது இடது கையில் சுவையான பானம் உள்ளது, அது சொர்க்கத்துக்கு கொண்டு போகிறது என்று வேறு வசனம் எழுதியிருக்கிறார். இந்த பதிவினை கண்ட ரசிகர்கள் அவரை கண்டபடி அர்ச்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

மதுபோதை

மதுபோதை

ஏற்கனவே முதல் போட்டி முடிந்து ஒரு நாள் ஓய்வு இருந்த நிலையில் கடற் கரைக்கு சென்ற ரவி சாஸ்திரி போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இப்போது, அதே போன்று போட்டோவையும் ரிலீஸ் செய்ய, ரசிகர்கள் கலாய்த்து எடுத்து விட்டனர். சதா போதையில் இருக்கும் இவரு ஒரு கோச்சா என்னும் அளவுக்கு திட்டி தீர்க்க ஆரம்பித்து விட்டனர்.

Story first published: Friday, September 6, 2019, 11:30 [IST]
Other articles published on Sep 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+