Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிகரத்தில் இருந்து புத்தாண்டு வாழ்த்து - கோலி -அனுஷ்கா தம்பதி கலகல

சுவிட்சர்லாந்து : சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விராட் கோலி -அனுஷ்கா சர்மா தம்பதி மலையுச்சியில் இருந்து தங்களது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வரும் 5ம் தேதி இலங்கையுடனான சர்வதேச டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது.

இந்த இடைவெளியில் சுவிட்சர்லாந்தில் கேப்டன் விராட் கோலி தன்னுடைய மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையொட்டி கடந்த சில தினங்களாக தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரும் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் கொண்டாட்டம்

சுவிட்சர்லாந்தில் கொண்டாட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடனான தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வரும் 5ம் தேதி இலங்கையுடன் சர்வதேச டி20 தொடரில் மோதவுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் தன்னுடைய காதல் மனைவியுடன் விராட் கோலி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவு

டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவு

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கடந்த சில தினங்களாக தங்களது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ வெளியிட்ட விராட்

இந்நிலையில் புத்தாண்டையொட்டி, மலையுச்சி ஒன்றிலிருந்து தங்களுடைய ரசிகர்களுக்கு அவர்கள் இருவரும் இணைந்து புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நிம்மதியை தரும் சிறந்த புகைப்படங்கள்

முன்னதாக அனுஷ்கா சர்மா தன்னை சிறப்பாக புகைப்படம் எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்து அந்த புகைப்படத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சிறந்த போட்டோகிராபர் எடுக்கும் புகைப்படங்கள் நிம்மதியை தரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Wednesday, January 1, 2020, 10:41 [IST]
Other articles published on Jan 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+