Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களின் பேச்சை குப்பையில் போட்ட டிராவிட்.. என்ன நினைக்கிறாங்கனே தெரியலையே? உச்சக்கட்ட கடுப்பு

மும்பை : வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ள நிலையில் அதிலும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தயார்படுத்த தான் தாங்கள் இப்படி வித்தியாசமான சோதனையில் ஈடுபட்டு வருவதாக ராகுல் டிராவிட் தரப்பு கூறுகிறது.

Indian cricket fans slams rahul dravid decision about giving chance to youngsters

இதனால்தான் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் ஒரு நாள் தொடரில் நாங்கள் பயன்படுத்தவில்லை என்று டிராவிட் தரப்பு கூறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனும், அக்சர் பட்டேலும் சேர்த்த இந்திய அணி தற்போது அக்சர்பட்டேலை நீக்கிவிட்டு ருதுராஜ் கெய்க்வாட்டையும், உம்ரான் மாணிக்கை நீக்கிவிட்டு உனாட்கட்டையும் கடைசி ஒரு நாள் போட்டியில் சேர்த்து இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுனர்கள், உலக கோப்பையில் முதல் மூன்று இடத்தில் கில், ரோகித் சர்மா, விராட் கோலி தான் விளையாடப் போகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த சமயத்தில் புதிய வீரர்களை நடுவரிசையில் களம் இறக்காமல் ஏன் முதல் மூன்று இடங்களில் களமிறக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடக்க வீரராக களம் இறங்கி சதம் விளாசினாலும் அவர் ஆசியக்கோப்பைக்கும் உலக கோப்பைக்கும் தொடக்க வீரராக விளங்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளனர்.தற்போது இந்திய அணியில் நம்பர் 4, 5, 6 வது இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தீர்மானிக்க அந்த இடத்தில் தான் புதிய வீரர்களை களமிறக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய அணியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்றும் ரசிகர்களின் பேச்சை டிராவிட் கேட்பது இல்லை என்றும் அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பரப்பப்பட்ட வருகிறது.இதனிடையே, ஒரு சிலர் இஷான் கீசனை மாற்று தொடக்க வீரராக அணியில் சேர்க்க தான் அவருக்கு ஓப்பனிங் இடம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் மெயின் அணியில் உலகக் கோப்பை தொடரில் இசான் கிஷன் இருக்க மாட்டார் என்றும் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, August 1, 2023, 19:59 [IST]
Other articles published on Aug 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+