Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் ஸ்டார் இந்தியா

Indian cricket finds a new Star
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்த சகாரா நிறுவனத்துக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே புனே வாரியர்ஸ் அணி தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதனால் இந்திய அணியின் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சகாரா குழுமம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் 2017ஆம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை இந்திய அணிக்கு ஸ்பான்சர் உரிமம் வழங்க டெண்டர் விடப்பட்டு இருந்தது.

அணி ஸ்பான்சர் உரிமத்துக்கான டெண்டர் தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 3 மணி வரை இந்திய கிரிக்கெட் வாரியம் அவகாசம் அளித்து இருந்தது. ஸ்டார் இந்தியா, சகாரா உள்பட 7 நிறுவனங்கள் உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தன.

டெண்டரை இறுதி செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பிரச்னையில் இருக்கும் சகாரா நிறுவனத்தின் டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு கேட்டு இருந்த ஸ்டார் இந்தியாவுக்கு உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஸ்டார் இந்தியா இருக்கும். இந்திய சீனியர் ஆண்கள், 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணி, ஆண்கள் 'ஏ' அணி, பெண்கள் அணி ஆகியவற்றின் சீருடையில் ஸ்டார் இந்தியாவின் அடையாள குறியீடு இடம் பெறும். ஸ்டார் இந்தியா நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒளிபரப்பு, இண்டர்நெட் மற்றும் மொபைல் உரிமத்தையும் ஏற்கனவே பெற்று இருக்கிறது.

ஆனால் சகாரா நிறுவனத்தின் டெண்டரை தொடக்கத்திலேயே தள்ளுபடி செய்தது நியாயமற்றது என்று அந்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, December 10, 2013, 11:28 [IST]
Other articles published on Dec 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+