Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி..உடல்நலக்குறைவின் போதும் தேசத்திற்காக நெகிழ்ச்சி ட்வீட்!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Indian Cricket Legend Sachin tendulkar Admitted in hospital due to COVID19

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி எம்.எஸ்.தோனி தலைமையில் கடந்த 2011ம் ஆண்டு இதே நாளில் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் கோப்பையை வென்ற 10வது ஆண்டு தினத்தை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும், வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த வேளையில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Indian Cricket Legend Sachin tendulkar Admitted in hospital due to COVID19

சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த மார்ச் 27ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டு தனிமையில் இருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கு நன்றி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளேன். சில நாட்களில் மீண்டு வருவேன். அனைவரும் பாதுகாப்பு இருங்கள். என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் உலகக்கோப்பையை வென்ற 10வது ஆண்டு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடைசியாக சாலை பாதுகாப்பு டி20 தொடரில் விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய பத்ரிநாத், யூசப் பதான், இர்ஃபான் பதான் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 2, 2021, 12:16 [IST]
Other articles published on Apr 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+