Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிதூள்.. சச்சின் ரசிகர்களுக்கு நற்செய்தி.. ஐபிஎல் தொடரின் போது பிசிசிஐ தரவுள்ள ஸ்பெஷல் கிஃப்ட்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்காக பெரும் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க திட்டமிட்டுள்ளனர் பிசிசிஐ அதிகாரிகள். அதுவும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் முன்னிலையில் இது நடக்கவுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விழா

சிறப்பு விழா

இதனையடுத்து அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24ம் தேதியன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார். இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர்.

என்ன தேதி?

என்ன தேதி?

ஏப்ரல் 24ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை சச்சினிடம் தெரிவித்துவிட்டதாக மும்பை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளே தெரிவித்திருக்கின்றனர்.

சச்சின் ரெக்கார்ட்

சச்சின் ரெக்கார்ட்

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, February 28, 2023, 10:18 [IST]
Other articles published on Feb 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+