Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதி.... அவரின் தற்போதைய நிலை என்ன... குடும்பத்தாருக்கும் கொரோனாவா?

மும்பை: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Indian Cricket Legend Sachin tendulkar Tested postive for COVID19

இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Indian Cricket Legend Sachin tendulkar Tested postive for COVID19

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், " எனக்கு சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுகான அறிகுறிகள் இருந்தன. இதனையடுத்து பரிசோதனை செய்து பார்ததில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் என் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

Indian Cricket Legend Sachin tendulkar Tested postive for COVID19

மேலும், கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், மருத்துவர்களின் ஆலோசனைகளை சரியாக பின்பற்றி வருவதாகவும், அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் நன்றி எனவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 27, 2021, 12:23 [IST]
Other articles published on Mar 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+