For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேட்ச்ல விளையாட சொன்னா போன்-ல விளையாடிட்டு இருக்காரு தோனி.. என்ன கேம்னு தெரியுமா?

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு போட்டிகள் முடிவடைந்து உள்ளது.

இந்தியா தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

அதற்கான பயணத்தின் இடையில் மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வீரர்கள் தோனி, ரோஹித் மற்றும் சிலர் போனில் வீடியோ கேம் ஆடிக் கொண்டு இருந்தனர்.

என்ன கேம் ஆடினார்கள்?

இந்திய வீரர்கள் வீடியோ கேம் ஆடிக் கொண்டு இருந்த புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ, "மும்பையில் விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில் சில வீரர்கள் ஒரு பிரபலமான பல பேர் ஆடும் விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அது என்ன என்று சொல்ல முடியுமா?" என கேட்டுள்ளது.

பப்ஜி தானே ஆடினார்கள்

பப்ஜி தானே ஆடினார்கள்

இன்று இந்தியாவில் மிக மிக பிரபலமான விளையாட்டாக இருப்பது பப்ஜி (PUBG) தான். கூகுள் ப்ளேஸ்டோரில் 100 மில்லியனுக்கும் மேல் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும் விளையாட்டு இது. இதை தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆடி இருப்பார்கள் என ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கருத்து கூறி உள்ளனர்.

விளையாடியது யார் யார்?

பிசிசிஐ வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தோனி, ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார், கேதார் ஜாதவ் உள்ளிட்டோர் தீவிரமாக தங்கள் கைபேசி அல்லது டேப்ளட் கருவியில் கேம் ஆடுவது தெரிகிறது.

பாவமாக பார்க்கும் பும்ரா

பாவமாக பார்க்கும் பும்ரா

இவர்களுக்கு நடுவே பும்ரா அமர்ந்து கொண்டு "இங்க என்ன நடக்குது?" என்பது போல பாவமாக பார்த்துக் கொண்டு இருப்பதும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது. ஏம்பா.. பும்ராவையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்பா.. பாவமா இருக்கா, இல்லையா?

Story first published: Wednesday, October 31, 2018, 12:59 [IST]
Other articles published on Oct 31, 2018
English summary
Indian cricket players dhoni, rohit and others were seen playing PUBG at Mumbai airport
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+