Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியீடு..2 -வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா...

துபாய் : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றதையடுத்து ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் மீண்டும் 2 வது இடத்துக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இந்த பட்டியலில் 129 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 115 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

indian team

தொடர்ந்து 4 தொடர்களை வென்று சர்வதேச கிரிக்கெட் அணிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ள வங்கதேச அணி 2017 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் தரவரிசைப்பட்டியலில் 7 வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர்கள் விராட் கோலி 4 வது இடத்திலும், ஷிகர் தவான் தவான் 7 வது இடத்திலும், தோனி 9 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை. புவனேஷ் குமார் இந்த பட்டியலில் 12 வது இடத்தில் உள்ளார்.

Story first published: Thursday, July 16, 2015, 19:58 [IST]
Other articles published on Jul 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+