Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வாத்தி கம்மிங் ஒத்து”.. 2022ல் இந்தியா காட்டப்போகும் தரமான சம்பவங்கள்.. முழு போட்டி அட்டவணைகள் இதோ!

மும்பை: 2022ம் ஆண்டில் இந்திய அணியின் விளையாடப்போகும் அட்டகாசமான போட்டிகளுக்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளது.

2021ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. டி20 உலகக்கோப்பை தொடர் தான் சரிவர அமையவில்லை. எனினும் மற்ற தொடர்களில் சிறப்பாகவே அமைந்துள்ளன.

இதனையடுத்து 2022ம் ஆண்டுக்கான திட்டங்கள் என்ன, எங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது போன்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க சீரிஸ்

தென்னாப்பிரிக்க சீரிஸ்

2022ல் இந்திய அணி தனித்தனி கேப்டன்களுடன் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி இந்திய அணிக்கு ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா அட்டவணை

இந்தியா vs தென்னாப்பிரிக்கா அட்டவணை

ஜனவரி 3 - 7 = 2வது டெஸ்ட் போட்டி

ஜனவரி 11 - 15 = 3வது டெஸ்ட் போட்டி

ஜனவரி 19 = முதல் ஒருநாள் போட்டி

ஜனவரி 21 = 2வது ஒருநாள் போட்டி

ஜனவரி 23 = 3வது ஒருநாள் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் டூர்

வெஸ்ட் இண்டீஸ் டூர்

தென்னாப்பிரிக்க தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பவுள்ள இந்திய அணி, சொந்த மண்ணிலேயே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் பிஃப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அட்டவணை

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அட்டவணை

பிப்ரவரி 6 = முதல் ஒருநாள் போட்டி, அகமதாபாத்

பிப்ரவரி 9 = 2வது ஒருநாள் போட்டி, ஜெய்பூர்

பிப்ரவரி 12 = 3வது ஒருநாள் போட்டி, கொல்கத்தா

பிப்ரவரி 15 = முதல் டி20 போட்டி, கட்டாக்

பிப்ரவரி 18 = 2வது டி20 போட்டி, விசாகப்பட்டினம்

பிப்ரவரி 20 = 3வது டி20 போட்டி, திருவனந்தபுரம்

இலங்கை சீரிஸ்

இலங்கை சீரிஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்றவுடனேயே இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு இரு அணிகளுக்கு இடையேயும் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

இந்தியா vs இலங்கை அட்டவணை

இந்தியா vs இலங்கை அட்டவணை

பிப் 25 - மார்ச் 1 = முதல் டெஸ்ட், பெங்களூரு

மார்ச் 5 - 9 = 2வது டெஸ்ட், மொஹாலி

மார்ச் 13 = முதல் டி20, மொஹாலி

மார்ச் 15 = 2வது டி20, தர்மஸாலா

மார்ச் 18 = 3வது டி20, லக்னோ

 பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா

பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா

இதன் பிறகு ஏப்ரல் - மே மாதங்களில் 15வது ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதால், அதனை முடித்துவிட்டு, இந்திய அணி ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அந்த அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

 இந்தியா vs தென்னாப்பிரிக்கா அட்டவணை

இந்தியா vs தென்னாப்பிரிக்கா அட்டவணை

ஜூன் 9 = முதல் டி20, சென்னை

ஜூன் 12 = 2வது டி20, பெங்களூரு

ஜூன் 14 = 3வது டி20, நாக்பூர்

ஜூன் 17 = 4வது டி20, ராஜ்கோட்

ஜூன் 19 = 5வது டி20, டெல்லி

இங்கிலாந்து டூர்

இங்கிலாந்து டூர்

இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி இங்கிலாந்தின் கணக்கை தீர்க்க அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஏற்கனவே விடுபட்ட 5வது டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா vs இங்கிலாந்து அட்டவணை

இந்தியா vs இங்கிலாந்து அட்டவணை

ஜூலை 1- 5 = 5வது டெஸ்ட்

ஜூலை 7 = முதல் டி20

ஜூலை 9 = 2வது டி20

ஜூலை 10 = 3வது டி20

ஜூலை 12 = முதல் ஒருநாள் போட்டி

ஜூலை 14 = 2வது ஒருநாள் போட்டி

ஜூலை 17 = 3வது ஒருநாள் போட்டி

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள்

இங்கிலாந்து தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஒருவேளை டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர், டிசம்பரில் நடைபெற்றால் இந்தியாவுக்கு மேலும் சில போட்டிகள் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 31, 2021, 19:52 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+