Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டி அட்டவணை இந்திய வீரர்களுக்கு செய்யும் அநீதி.. இரவு 2 மணி ஆச்சு.. முரளி கார்த்திக் வேதனை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தொடர்ச்சியான போட்டி அட்டவணை வீரர்களுக்கு அநீதியானது என்று தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட உள்நாட்டு டி20 தொடர் முடிந்த கையோடு, இந்திய அணி நியூசிலாந்துக்கு அனைத்து வித போட்டிகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22, வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக போதிய பயிற்சி பெற நேரமில்லை என்று இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

Shreyas Iyer

இந்திய அணி இரு குழுக்களாக நியூசிலாந்து சென்றுள்ள நிலையில், முதல் குழு அக்டோபர் 19, திங்கள்கிழமை அங்கு சென்றடைந்தது. கிரைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் முதல் போட்டிக்கு முன்னதாக வீரர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பிரக்யான் ஓஜா முன் காத்திருக்கும் சவால்கள் என்ன?

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பிரக்யான் ஓஜா முன் காத்திருக்கும் சவால்கள் என்ன?

பெங்களூரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து பேசிய சஞ்சு சாம்சன், "நாங்கள் அக்டோபர் 20 அன்று அங்கு சென்றடைந்து, 21 அன்று பயிற்சி செய்து, 22 அன்று போட்டியில் விளையாடுவோம். எனவே, இங்கு நாங்கள் சிறப்பாகச் செய்த விஷயங்களை அங்கு கொண்டு செல்ல முயல்வோம். அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற சிறிது நேரம் ஆகும், எனவே அதற்கேற்ப மாற்றி கொள்ள இரண்டு அல்லது மூன்று பந்துகளை எடுத்துக் கொள்வோம்" என்று கூறினார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் உறுப்பினர்கள், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிறகு தாமதமாகவே அணிக்குத் திரும்பினர் என்று முரளி கார்த்திக் தெரிவித்தார். இது குறித்து பேசிய முரளி கார்த்திக், "ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போட்டிகளுக்கு இடையே என்ன நடந்தது என்பதை யோசித்தால், வீரர்களுக்கு இது மிகவும் கடினமாக இருந்தது என்பது புரியும்.

நல்லவேளையாக பெங்களூரு போட்டி மழையால் ரத்தானது. ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்கள் டெல்லி சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு வர வேண்டியிருந்தது. இடைவெளி வெறும் 2 நாட்கள் மட்டுமே. போட்டிக்கு முந்தைய நாள் அதிகாலை 2 மணிக்குத் தான் அவர்கள் வந்தடைந்தனர் என்று நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

"ஸ்ரேயாஸ் ஐயரும் இதைக் குறிப்பிட்டிருந்தார். தான் எங்கே இருக்கிறோம், என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியவில்லை. இங்கிருந்தும் இரு குழுக்களாகப் பிரிந்தே நியூசிலாந்துக்குச் சென்றுள்ளனர். எனவே இது மிகவும் குறுகிய கால இடைவெளியாகும்."

இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்.. அதிக ரன்கள், விக்கெட் எடுத்த வீரர்கள் யார்? முழு ரெக்கார்ட் விவரம்

Also Read

இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்.. அதிக ரன்கள், விக்கெட் எடுத்த வீரர்கள் யார்? முழு ரெக்கார்ட் விவரம்

"முதன்முறையாக அங்கு செல்லும் வீரர்களுக்குச் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். எனவே, அட்டவணை வீரர்களுக்குக் கடுமையாக உள்ளதுடன், நாம் அவர்களிடம் சற்று அநீதியாக நடந்து கொள்கிறோம் என்றும் தோன்றுகிறது" என்றும் முரளி கார்த்திக் விரிவாக கூறினார்.

Story first published: Tuesday, October 20, 2026, 7:00 [IST]
Other articles published on Oct 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+