Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பிரக்யான் ஓஜா முன் காத்திருக்கும் சவால்கள் என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பிரக்யான் ஒஜா,பிசிசிஐயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஒஜா, தெற்கு மண்டலம் சார்பாக தேர்வு குழுவில் உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.

அஜித் அகர்கார்க்கு பிறகு அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சூழலில் பிரக்யான் ஒஜா, முன் காத்திருக்கும் சவால்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். அஜித் அகார்கர், இந்திய அணி தேர்வு குழு தலைவராக இருந்து இரண்டு டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவினாலும் அவர் மீது சில விமர்சனங்கள் இருக்கிறது.

Pragyan ojha

அதாவது அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல், அகார்கர் காலம் தாழ்த்தி வருகிறார் மற்றும் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் தொடர்ந்து அணியில் இடம்பெற முடிவதில்லை என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்திய மண்ணில் 400 ரன் குவித்து வரலாறு படைத்த சின்மய்.. 78 ஆண்டுகளில் முதல்முறை.. ரஞ்சியில் சாதனை

இந்திய மண்ணில் 400 ரன் குவித்து வரலாறு படைத்த சின்மய்.. 78 ஆண்டுகளில் முதல்முறை.. ரஞ்சியில் சாதனை

குறிப்பாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இந்திய அணியின் கேப் கிடைப்பது தற்போது அவ்வளவு எளிதாக மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் தற்போது அணியில் அறிமுகமாகிவிடலாம் என்ற நிலை இருக்கின்றது என்று கூறியுள்ளார். இனி இளம் வீரர்கள் தான் வாய்ப்பு என்ற ரூட்டில் அகர்கர் சென்றதால் இந்திய அணிக்கு பல தோல்விகள் பரிசாக கிடைத்தது.

இந்த சூழலில் தான் பிரக்யான் ஒஜா, புதிய பாதையை தேர்ந்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அகர்கர் போல் இல்லாமல் தாம் அனுபவ வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன் என்பதை ஏற்கனவே நியூசிலாந்து தொடரின் புவனேஸ்வர் குமாரை சேர்த்ததின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

பிரக்யான் ஒஜா, தற்காலிக தேர்வு குழு தலைவராக இருந்தபோது அவர் புவனேஸ்வர் குமாரை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் அழைத்தார். அதேவேளையில் பல இளம் வீரர்களுக்கும் அவர் வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என இருவருக்கும் கலந்துதான் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஸ்டைலில் தான் பிரக்யான் ஒஜா பின்பற்றப் போகிறார்.

2026 டி20 உலக கோப்பைக்கு முன்பு அணியில் சேர்க்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அப்போது டி20 உலகக்கோப்பைக்கு முன்பு ஓஜா சாதாரண உறுப்பினராக இருந்து கில்லை சேர்க்கக்கூடாது என்றும் அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

அதற்கு செவி சாய்த்த பிசிசிஐ கில்லை நீக்கிவிட்டு இசான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சனை சேர்த்தது. இது இந்திய அணிக்கு பெரும் நன்மையாக மாற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. சாதாரண உறுப்பினராக இருந்தபோது அணியில் எந்த வீரர் இருந்தால் சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்ட பிரக்யான் ஓஜா, தற்போது தேர்வுக்குழு தலைவராக மாறி இருப்பதன் மூலம் அணியை சிறப்பான முறையில் கட்டமைப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரக்யான் ஒஜா முன் இருக்கும் மிகப்பெரிய சவாலே எந்தத் தொடரில் எந்த வீரர்களை சேர்ப்பது என்பதுதான். அதாவது பும்ரா போன்ற வீரர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாடி வருகிறார். இதனால் பும்ராவை எந்த தொடரில் சேர்ப்பது எந்த தொடரில் விடுவது என்பதை தீர்மானிப்பது இனி ஓஜாவின் வேலை. அதுமட்டுமில்லாமல் பும்ராவுக்கு வயதாகி வருவதால் அவருக்கு மாற்று வீரரை கண்டறிய வேண்டிய பொறுப்பும் ஒஜாவுக்கு உள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் தேடி மாற்று வேகம் பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் பிரக்யான் ஒஜா இறங்க வேண்டும். பிரக்யான் ஒஜா, தற்போது இருக்கும் மிகப்பெரிய சவாலை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தகுதி பெற தேவையான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் இதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

அதன் பிறகு 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தயார் செய்ய வேண்டும். தற்போது ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதன் மூலம் அவர்களுக்கு மாற்று வீரர்களையும் பிரக்யான் ஒஜா கண்டறிந்து அணியில் தேர்வு செய்ய வேண்டும். மேலும் வீரர்கள் தொடர்ந்து காயம் அடைவதை தடுக்கும் விதமாக, அவர்களுக்கு முறையான ஓய்வுகளை வழங்கி சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பும் ஓஜா முன் இருக்கின்றது.

ஒரு தேர்வுக்குழு தலைவரின் பொறுப்பு வீரர்களை தேர்வு செய்வது மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை சரியான முறையில் ரசிகர்களிடம் விளக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட வீரர்களை தொடர்பு கொண்டு நீங்கள் எங்களுடைய ரேடாரில் கீழ் தான் இருக்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள். உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நம்பிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. வசீம் ஜாபருக்கு பதவி கிடைக்காதது ஏன்?

Also Read

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. வசீம் ஜாபருக்கு பதவி கிடைக்காதது ஏன்?

ஆனால் இது போன்ற ஒரு வாக்குறுதியை பல தேர்வு குழு தலைவர்கள் செய்வதில்லை. முகமது சமி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும். அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் தேர்வுக்குழுவிடும் எந்த தகவலும் வரவில்லை. எனவே ஓஜா போன்ற இதனை சரியாக செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, October 19, 2026, 18:58 [IST]
Other articles published on Oct 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+