Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய மண்ணில் 400 ரன் குவித்து வரலாறு படைத்த சின்மய்.. 78 ஆண்டுகளில் முதல்முறை.. ரஞ்சியில் சாதனை

மும்பை: இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் சுமார் 78 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஞ்சி கோப்பை போட்டியில் 400 ரன்கள் குவித்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளார் மிசோரம் அணியின் சின்மய் சுதார். நாகாலாந்து அணிக்கு எதிரான ரஞ்சி பிளேட் டிவிஷன் போட்டியில் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 400 ரன்களை விளாசியுள்ளார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 400 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீரர் என்ற அரிய வரலாற்றுப் பெருமையை இவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

சோவிமாவில் உள்ள நாகாலாந்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 29 வயதான சின்மய் சுதார் சளைக்காமல் நின்று இரண்டு நாட்கள் ஆடினார். அதில் 517 பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்காமல் 400 ரன்களைக் குவித்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு கடந்த 1948-ல் மகாராஷ்டிரா வீரர் பி.பி. நிம்பல்கர் புனேவில் காத்தியவார் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 443 ரன்கள் எடுத்திருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு சுமார் 78 ஆண்டுகளாக எந்தவொரு இந்திய பேட்டராலும் தொட முடியாத இந்த இமாலய இலக்கை, சின்மய் சுதார் தற்போது தொட்டு இந்திய கிரிக்கெட்டில் தனது பெயரை ஆழமாக பதித்துள்ளார்.

Chinmay Sutar Scores Historic Unbeaten 400 in Ranji Trophy First Indian to Reach Milestone in 78 Years

முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில், உலக அளவில் 10-வது பேட்டராக சின்மய் சுதார் இணைந்துள்ளார். இந்த அரிய பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா 501 மற்றும் 400 ரன்களுடனும், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் 452 ரன்களுடனும் முதன்மையாக உள்ளனர். பில் போன்ஸ்ஃபோர்ட், ஹனீப் முகமது, சாம் நார்த்ஈஸ்ட் போன்ற சிறந்த பேட்டர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் சின்மய் இடம்பிடித்து இந்திய கிரிக்கெட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

"ஒட்டுமொத்த பழியையும் குல்தீப் யாதவ் மீது போடுவதா?".. பயிற்சியாளர் கம்பீரை விளாசிய அஸ்வின்

மும்பை கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்கி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஆடிய சின்மய் சுதார், தற்போது மிசோரம் அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தால் மிசோரம் அணி நாகாலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 154.1 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 581 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Story first published: Monday, October 19, 2026, 15:58 [IST]
Other articles published on Oct 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+